2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் உட்சேர்ப்பு பற்றி SLIIT அறிவிப்பு

Gavitha   / 2016 மே 15 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமான, இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டக்கீழ் படிப்புகளுக்கான ஜூன் 2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில்BSc (Hons) பட்டம் என்பது தகவல் தொழில்நுட்பம், தகவல் கட்டமைப்புகள் பொறியியல், மென்பொருள் பொறியியல், ஊடாடு ஊடகம் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற அங்கங்களை கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் BSc பட்டம் மூலமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடாடு பல்லூடக பிரிவுகளில் விசேட நிபுணத்துவத்தை பெற்றக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. வியாபார மேற்பார்வை கற்கைகளில் இளமானிப் பட்டம் - BBA (Hons) என்பது, மனித மூலதன முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் ‡பினான்ஸ், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், தர முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தகவல் கட்டமைப்புகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

சகல மாணவர்களுக்கும் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு SLIIT நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை 2016 மே மாதம் 6ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றனர். குறித்த கற்கைகளுக்கான தெரிவு என்பது உளச் சார்புத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்தத் தேர்வு மே மாதம் 15ஆம் திகதி நடைபெறும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X