2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மொபிடெல் mCash யூனியன் அஷுரன்ஸ் பீஎல்சீ உடன் இணைவு

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநரான மொபிடெலின், நடமாடும் நிதித் தளமான (mobile money platform) mCash, யூனியன் அஷுரன்ஸ் பீஎல்சீ உடன் பங்காளியாக இணைந்துள்ளது. யூனியன் அஷுரன்ஸ், தனது ஆயுள் காப்புறுதிக் கட்டுப்பணங்களின் வசூல் செயற்பாட்டிற்காக, mCash தளத்தினை, ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இந்தப் புதிய சேவையின் ஊடாக யூனியன் அஷுரன்ஸ் ஆலோசகர்களுக்கு தமது வாடிக்கையாளர்களின் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை துரிதமாகவும், சுலபமாகவும் புதுப்பித்துக்கொள்ள முடியும். அதேவேளை, வாடிக்கையாளர்கள் தமது கொடுப்பனவுகளைச் செலுத்திய அதே கனத்தில், தமது கொடுப்பனவை உறுதி செய்யும் முகமாக குறுந்தகவல் (SMS) ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஏற்பாடானது, காப்புறுதிக்கான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு வசதி, பாதுகாப்பு மற்றும் தெளிவு போன்ற விடயங்களுக்கு உத்தரவாதமளிக்கிறது. 

இந்த முயற்சியானது, இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதுடன், மொபிடெல் mCash ஆனது அதன் சேவைகளை யூனியன் அஷுரன்ஸ் பீஎல்சீ யின் கொடுப்பனவு வசூல் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திற்காக வழங்குகின்றது. அத்துடன், தமது காப்புறுதிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பயனுள்ளதும், பொருத்தமானதுமான ஒரு நுட்பத்தையும் உருவாக்கவுள்ளது. நிறுவப்பட்ட mCash தளத்தின் ஊடாக வழங்கப்படும் தொழில்நுட்ப உதவிகளுடன் யூனியன் அஷுரன்ஸ் பீஎல்சீ வழங்கும் காப்புறுதி தொடர்பான தீர்மானங்கள் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு மிகத் திறமையான முறையில் ஆதரவை வழங்குகிறன.

இந்த முன்னெடுப்புக்காக மொபிடெல் mCash வழங்கும் தொழில்நுட்ப வளங்களும், அறிவும் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக காப்புறுதித் தீர்மானங்களை நாடும் எதிர்கால சந்தைகளை ஊக்குவிப்பதற்காக யூனியன் அஷுரன்ஸ் பீஎல்சீ யின் வளர்ச்சித் தகைமைகளை மேலும் அதிகரிக்கும். உயர் தரம் மிக்க mCash தொழில்நுட்பமானது, நகர்ப்புறங்களுக்கு மிகத் தொலைவில் அமைந்துள்ளதும் பின்தங்கியதுமான பிரதேசங்களின் வர்த்தக வாய்ப்புகளுக்கு உறுதுணையாக அமையும்.

துரித வளர்ச்சியுடனும், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையுடனும் மொபிடெலானது, நாடளாவிய ரீதியில் மிக உறுதியான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. அதன் mCash ஆனது, நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மிகத் துரிதமாகவும், சுலபமாகவும் மேற்கொள்வதற்காக, தமது வாடிக்கையாளர்களுக்கு நடமாடும் நிதிக் கணக்குகளைப் பேணுவதற்கும் வசதியளித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அனுமதிக்கப்பட்ட அஊயளா ஆனது, வைப்புச் செய்தல், மீளப்பெறல், நிதி மாற்றீடு செய்தல், பொதுச் சேவைகள் பட்டியல்களை (Utility bills) செலுத்துதல், காப்புறுதித் தவணைக் கட்டணங்கள் மற்றும் லீசிங் கொடுப்பனவுகள், அரசாங்க நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், நன்கொடைகளை வழங்குதல் மற்றும் நாளாந்த பொருட்கள் சேவைகளின் கொள்வனவு போன்றன அடங்கலாக பரந்த அளவிலான சேவைகளை வழங்குகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X