2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மாலைதீவுகளில் கொமர்ஷல் வங்கி

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் ட்ரீ டொப் முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக கொமர்ஷல் வங்கி மாலைதீவுகளில்  கிளை ஒன்றை திறந்து வைத்துள்ளது. தலைநகர் மலேயில் மாலைதீவு ஜனாதிபதி யாமீன் அப்துல் கையூமால் மாலைதீவுக்கான கொமர்ஷல் வங்கியின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது.  

இலங்கையின் தலைசிறந்த தனியார் வங்கியின் நிபுணத்துவ உறுதிப்பாட்டுடன் கொமர்ஷல் வங்கி இந்த துணை நிறுவனத்தின் கிளையின் 55% பங்குரிமையைக் கொண்டிருக்கும். அத்தோடு உள்ளூர் சந்தை பற்றிய ஆழமான அறிவைக் கொண்டுள்ள அதன் உள்ளூர் பங்காளி நிறுவனம் 45% பங்கைக் கொண்டிருக்கும்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு என்பனவற்றுடன் கொமர்ஷல் வங்கி செயற்படும். மாலைதீவு சந்தையில் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவை மற்றும் வர்த்தக தேவை என்பனவற்றை ஈடுசெய்யும் வகையில் மூலோபாய அணுகுமுறையை இவ்வங்கி பின்பற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்டதாகவும், புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் மற்றும் வாடிக்கையாளர் சிநேகம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டும் வங்கி பணியாற்றும். மாலைதீகளில் மக்களால் மிகவும் வேண்டப்படும் ஒரு நிதிச் சேவை நிறுவனமாகவும் இது அமையும்.  

இக் கூட்டு முயற்சியானது கொமர்ஷல் வங்கியின் மூன்றாவது கடல்கடந்த வங்கிச் செயற்பாட்டு வர்த்தக முயற்சியாகும். 2003இல் வங்கி பங்களாதேஷில் பிரவேசித்தது. 2015 ஜுன் மாதம் அது மியன்மாரில் பிரதிநிதித்துவ அலுவலகத்தைத் தொடங்கியது.  

மாலைதீவுகளில் உள்ள தனிநபர்களுக்கும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் விரிவான பல்வகை நிதிச் சேவைகளை இந்த வங்கி வழங்கும். அவை பிரதானமாக ஏழு வகைப்படும். முதலீட்டுச் சேவைகள், சேமிப்புக் கணக்கு, சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு, சிறுவர் சேமிப்புக் கணக்கு, சக்தி சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புக்கள், திறைசேரி வைப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X