2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் மொபிடெல் கைச்சாத்து

Gavitha   / 2016 ஜூன் 15 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தொலைத் தொடர்பாடல் சேவைகளை வழங்கும்  மொபிடெல் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு இலகு கொடுப்பனவு முறை அடிப்படையில் முச்சக்கரவண்டிக்கான மீட்டர்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் நாளாந்தம் மிக குறைந்த கட்டணத்தை செலுத்துவதன் மூலம் முச்சக்கரவண்டி மீட்டர்களை பெற்றுக்கொள்ள முடியும். தெலைத்தொடர்பாடல் சேவை வழங்கும் நிறுவனமொன்று முதல் முறையாக இவ்வாறானதொரு சேவையை வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

போட்டி நிறைந்த சூழலில் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்வதே இந்நிகழ்ச்சிதிட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் பயணிகள் வினைத்திறன் மிக்க மிக சிறந்த சேவையை பெற்றுகொள்ள முடியும். தாம் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் சரியான கட்டணத்தை அறவிடும் வாய்ப்பு முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு கிட்டும். SLT மொபிடெல் அறிமுகப்படுத்தும் சேவையின் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் கொள்வனவு செய்த புதிய மீட்டர்களில் மொபிடெல் இனைப்பின் மூலம்  நாளாந்தம் இதற்கான கட்டணங்களை செலுத்த முடியும்.

முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு SLT மொபிடெல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாளாந்தம் தமது வாழ்கை செயற்பாடுகளில் தொழிநுட்பத்தின உதவியுடன் மேலும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பதை தெரிவிப்பதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும். ஆதிக கட்டணம் செலுத்தி மீட்டரை கொள்வனவு செய்யமுடியாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் இத்திட்டமானது, இலகுவாக முச்சக்கரவண்டி மீட்டர்களை பெற்றுகொள்ள மிகச்சிறந்த வழியாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X