2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

மக்கள் விரும்பும் சிறந்த வர்த்தக நாமமாக சிங்கர் தெரிவு

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து 14ஆவது ஆண்டாக சிங்கர், இலங்கை ‘மக்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த வர்த்தக நாமம்’ ஆக (People’s Brand of the Year) தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ‘மக்கள் விரும்பும் நீடித்து உழைக்கும் வர்த்தகநாமம்’ (People’s Durable Brand of the Year) விருதையும் தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாகவும் தனதாக்கியதன் மூலம், நாடு முழுவதும் சந்தையில் அதன் தலைமைத்துவம், பல்லாண்டு காலமாக மக்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவற்றை மேலும் உறுதி செய்தது. 

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) ஏற்பாடு செய்திருந்த, SLIM - Nielsen மக்கள் விருதுகள் மூலமாக, நுகர்வோரின் தெரிவுகள் பதிவு செய்யப்பட்டு, அதிகளவு தெரிவைப் பெற்ற நாமங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது மக்கள் முன்னைய வருடத்தில் தமக்கு விருப்பமான நிறுவனங்கள், வர்த்தக நாமங்கள், நபர்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை தெரிவு செய்யமுடியும். 

இதன் வெற்றியாளர்கள் நாடு முழுவதும் 15 - 60 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இரு பாலார் உள்ளடங்கலாக 5,000 பேரிடையே முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இக் கணக்கெடுப்பின் தனித்துவம் என்னவென்றால், மக்கள் தாம் விரும்பிய வர்த்தக நாமங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், இதன் மூலம் நிச்சயமாக எந்த வர்த்தக நாமங்கள் அதிக நுகர்வோரைக் கொண்டிருக்கின்றன என்பதற்கான உண்மையான பிரதிபலிப்புக்கு வழிவகுக்கிறது. 

சிங்கர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிப்பதோடு, தினமும் மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொடும் ஒரு எழுச்சியூட்டும், பொறுப்புள்ள பெறுநிறுவன தலைவனாக தொடர்கின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X