2025 ஜூலை 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் சேர்டிஸ் லங்கா கிளை

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்   

சேர்டிஸ் லங்கா குழுமம் தமது வாடிக்கையாளர்களுககு சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்குடன் மட்டக்களப்பில் தனது கிளையை கடந்த வாரம் ஆரம்பித்தது.   

இதன் திறப்பு விழா நிகழ்வு அன்றைய தினம், காலை சர்டிஸ் லங்கா குழுமத்தின் தலைவர் சன்க விஜேய சிங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டு கிளையினைத்திறந்து வைத்தார்.   

இதன் போது, சேர்டிஸ் லங்கா பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் உபுல் ஹெட்டகே, குழுமப் பணிப்பாளர் பிரிகேடியர் உதேன கேந்தரகம ஆகியோருடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகப்பிரமுகர்கள் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.   

சேர்டிஸ் லங்கா 1977இல் தனது செயற்பாடுகளைச் சேர்டிஸ் சிஸ்கோ செக்கியுரிட்டி நிறுவனத்துடன் இணைந்து அரம்பித்தது. சிங்கப்பூர் அரச நிதியில் இயங்கும் டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானதொரு நிறுவனமாகும்.   

சேர்டிஸ் லங்கா டெக்னோலஜி அன்ட் கன்சல்டன்சி (பிரைவெட்) லிமிட்டெட் - மின்னணு பாதுகாப்பு அமைப்புக்கள், சர்டிஸ் லங்கா ஹோம் நேசிங் அன்ட் ஸ்விட்ட கெயார் (பிரைவெட்) லிமிட்டெட் - செவிலியர் உதவியாளர்கள், அழைப்பின் போது மருத்துவர் மற்றுமும் ஆம்புலன்ஸ் சேவை, சேர்டிஸ் லங்கா குரியர் சேர்விஸ் (பிரைவெட்) லிமிட்டெட் - குரியர் சேவைகள். ஆகியவற்றினை சேர்டிஸ் லங்கா லங்கா குழுமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.   

கடந்த 3 தசாப்தத்துக்கும் மேலாக சேர்டிஸ் லங்கா நிறுவனம் தனது கவனத்தைத் தொழில்நுட்பம்மிக்க பாதுகாப்புச் சேவை, கவனிப்புச் சேவைகளைப் பரிபூரணமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது.   
அதன் சேவையானது பணம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லல், மனை மற்றும் தொழில் சாரந்த நர்சிங் சேவையினை வழங்குதல், மின்னணு பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் கொரியர்  சேவைகளை வழங்குதல் போன்றவைகளை ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு இலகுவானத் தெரிவுகளுக்கு அமைய வழங்கவுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .