2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மன்னாரில் விஷேட தேவை உடைய மாணவர்களுக்கு வகுப்பறைகள்

Gavitha   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் ஒரு பாடசாலையில் விஷேட தேவை உடைய மாணவர்களுக்கு செலிங்கோ லைஃப்பின் உபகாரத்தால் தற்போது தமது தேவைக்கு ஏற்ற வகுப்பறைகள் கிடைத்துள்ளன.

செலிங்கோ லைஃப் மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் குறிப்பிட்ட தேவையின் நிமித்தம் நிர்மாணிக்கப்பட்ட இந்த வகுப்பறையை அண்மையில் கையளித்தது. இது 80 ஆசிரியர்களையும் 1,700 மாணவர்களையும் கொண்ட ஒரு அரசாங்க பாடசாலையாகும்.

செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் அதன் சமூகக் கூட்டாண்மை பொறுப்புத் திட்டத்தின் கீழ், கட்டி முடித்து அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள 65ஆவது பாடசாலை வகுப்பறைக் கட்டடம் இதுவாகும். நாட்டில் உள்ள பின் தங்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் அமுல் செய்யப்பட்டு வருகின்றது.

பாடசாலைக்கு வகுப்பறை கட்டிடத்தை கையளிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், பிராந்திய கல்வி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2004ஆம் ஆண்டு லுனுகம்வெஹர திஸ்ஸ ஆரம்ப பாடசாலைக்கு வகுப்பறைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோடு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. செலிங்கோ லைஃப்பின் பாடசாலை உட்கட்டமைப்புத் திட்டம் இலங்கையின் சகல பாகங்களிலும் அமுல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, சித்தாண்டி, முல்லிபொத்தான, ஆயித்தியமலை, எம்பிலிப்பிட்டிய, நிவித்திகலை, பெலிகல, அவிஸ்ஸாவலை, தெனியாய, கம்புறுபிட்டிய, பண்டாரவளை, ஹப்புத்தளை, றம்புக்கன, கண்டி, பிலிமத்தலாவ, மதுல்கெலே. றிகிலகஸ்கடே, றஜவெலை, மாத்தளை, கல்கமுவ, பதவிய, பெரலுவௌ, அநுராதபுரம், மொனராகலை, ஆனமடுவ மற்றும் மத்துகம ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சியில் இத்தகைய ஒரு வகுப்பறை கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு இறுதியில் அது கையளிக்கப்படும் என்று கம்பனி அறிவித்துள்ளது.

செலிங்கோ லைஃப்பின் சமூகக் கூட்டாண்மை பொறுப்பானது 'நாட்டு மக்களுக்குத் தேவையான அதி உயர் தரம் வாய்ந்த பாதுகாப்பையும் நிதி ரீதியான உறுதிப்பாட்டையும் வழங்கும் அதேவேளை மிகவும் பின்தங்கிய இடங்களில் கூட தேவை உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதார நலன் போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள தலையீட்டின் மூலம் நீடித்து நிலைக்கக் கூடிய வர்த்தக சுற்றாடலை உருவாக்குவதில் தொடர்ச்சியான அர்ப்பணத்தை கொண்டிருப்பதாகும்' என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X