Editorial / 2020 மார்ச் 26 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பாவின் முன்னணி கார் உற்பத்தி வர்த்தக நாமங்களில் ஒன்றான ஃபியட் (Fiat) சீனாவில் அமைந்துள்ள தனது கார் உற்பத்தி நிலையமொன்றை முகக் கவசங்கள் (Mask) உற்பத்திக்கு ஈடுபடுத்த முன்வந்துள்ளது. இந்த நிலையத்தினூடாக மாதமொன்றில் ஒரு மில்லியன் முகக் கவசங்கள் வரை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிட்டுள்ளது.
அடுத்த ஓரிரு வாரங்களில் தமது உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக் மான்லி தெரிவித்தார்.
மேலும் இதர பிரதான கார் உற்பத்தி நிறுவனங்களான ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட் மற்றும் டெஸ்லா ஆகியன கார் உற்பத்தி நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்க முன்வந்துள்ளன. இவற்றுடன் ஜப்பானின் கார் உற்பத்தியாளரான நிஸான் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்டியங்கும் ஃபோர்மியுலா 1 பந்தய அணிகளும் இந்த வென்டிலேட்டர்கள் உற்பத்திக்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பிரதான கார்கள் உற்பத்தி நிறுவனங்கள் தமது வாகன உற்பத்தி செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு அவசியமான முக்கியமான மருத்துவ சாதனங்களில் ஒன்றாக அமைந்துள்ள வென்டிலேற்றர்களை உற்பத்தி செய்வதற்கு இவை பங்களிப்பு வழங்குகின்றன.
அந்த வகையில், மின்விசிறிகள், பற்றரிகள் மற்றும் இதர கார் உற்பத்திக்கு பயன்படும் உதிரிப்பாகங்களைக் கொண்டு செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் மற்றும் வென்டிலேற்றர்கள் போன்றவற்றை வடிவமைப்பதற்காக ஜிஈ ஹெல்த்கெயர், 3M ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தாம் செயலாற்ற ஆரம்பித்துள்ளதாக ஃபோர்ட் அறிவித்துள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஃபோர்மியுலா 1 அணிகள் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் தம்மை ஈடுபடுத்தியுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தன. இதற்காக அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகார அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதாகவும் அவை தெரிவித்திருந்தன. தம் வசம் வடிவமைப்பு நிபுணர்கள் காணப்படுவதாகவும், நவீன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆற்றல் போன்றன இருப்பதாகவும் ஃபோர்மியுலா 1 அணிகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இந்தியாவின் மஹிந்திரா குழுமமும் வென்டிலேற்றர்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
41 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago