2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களின் கல்வியை மீட்கும் முயற்சிக்கு கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் தலைமைத்துவம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்கள் மற்றும் அவ்வப்போது கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலும் உள்ள 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு தமது கல்வியை மீட்பதற்கு உதவி செய்யும் தேசிய முயற்சிக்கு கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன தலைமை தாங்குகின்றன.

கல்வி அமைச்சுத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்கு அமைய தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85% பேர் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை. இது அவர்களின் இடைநிலை பாடசாலையின் மாற்றத்துக்கும், அதற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இன்றியமையாததாகும்.

கல்வி அமைச்சர் கலாநிதி சசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் மற்றும் அரசாங்க, அபிவிருத்திப் பங்காளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மொத்தத் தேசிய உற்பத்தியில் 2% இற்கும் குறைவான தொகையையே இலங்கை தற்பொழுது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இது கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்    4-6% ஆக இருக்க வேண்டும் என்ற சர்வதே அளவுகோலுக்குக் கீழ் காணப்படுவதுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகவும் குறைவாகவும் காணப்படுகிறது.

கற்றல் நெருக்கடியானது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்களையும், ஆரம்பத் தரங்களில் உள்ள சிறுவர்களையும், நாட்டின் பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X