Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகங்களை ஒன்றிணைத்தல்: சமூகங்களின் பொருளாதார ஆற்றலை மேம்படுத்துவதில் (BCoB) சிவில் சமூக அமைப்புகளின் (CSOs) செயற்பாடுகளுக்கு வலிமையூட்டல் திட்டத்தினூடாக மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டங்களை வேர்ள்ட் விஷன் டொச்லாந்து அதன் உள்நாட்டு பங்காளர்களான வேர்ள்ட் விஷன் ஸ்ரீ லங்கா, ஜனதக்ஷன் ஆகியவற்றால் செயற்படுத்தப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, பதுளை, ரிதீமலியத்த, கெசெல்பொத பிரதேசத்தைச் சேர்ந்த முதுபண்டா, பிறப்பிலிருந்து நடமாடுவது, குனிவது அல்லது அமர்வது ஆகியவற்றில் மாற்றுத்திறனைக் கொண்டிருந்த நிலையில், தமது விற்பனை நிலையத்தை நகரில் முன்னெடுத்து வந்ததுடன், பேருந்து ஒன்றை குத்தகை முறையில் கொள்வனவு செய்து மேலதிக வருமானத்தை பெற்ற வண்ணமிருந்த நிலையில், சில வருட காலமாக அவரின் வருமானம் குறைவடைந்திருந்த நிலையில், இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக இவரை செயற்றிட்ட ஒழுங்கிணைப்பாளர் திலீப கமகே இனங்கண்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், வேர்ள்ட் விஷன் வழங்கும் உதவிகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முதுபண்டா, தமக்கு தானிய அரைக்கும் இயந்திரமொன்றை வழங்குமாறு கோரியிருந்தார். இது போன்ற இயந்திரத்தை அவர் இதற்கு முன்னர் பயன்படுத்தியிருக்காத நிலையில், காணப்படும் சந்தை வாய்ப்புகளை புரிந்து கொண்டு செயலாற்றுவது, புதிய விடயங்களை ஆரம்பிப்பதில் முதுபண்டா காண்பிக்கும் ஈடுபாட்டை உறுதி செய்திருந்தது. வேர்ள்ட் விஷன் அணி இவருக்கு மேலும் உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், தராசு, நீர் பம்பி, பொதி சீலர் போன்றவற்றையும் வழங்கியிருந்தது.
சமூகங்களின் பொருளாதார ஆற்றலை மேம்படுத்தும் (BCoB) திட்டத்தினூடாக, பதுளை மாவட்டத்தில் காணப்படும் மாற்றுத்திறன் வாய்ந்த நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு சேவைகள், வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டில் உள்ளடக்கமான, நிலைபேறான உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு உள்நாட்டு சிவில் சமூக நிறுவனங்களை (CSOs) வலிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளரான வேர்ள்ட் விஷனுடன் இணைந்து பதுளை மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அதிகளவு வறுமை, மாற்றுத்திறனாளிகள் காணப்படும் மாவட்டமாக பதுளை மாவட்டம் இனங்காணப்பட்டிருந்தது.
பதுளையில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை இனங்கண்டதுடன், பராமரிப்பாளர்களின் திறன்களின் பிரகாரம், அவர்களுக்கு பயில்வதற்கு காணப்படும் ஆற்றல் தொடர்பிலும் வேர்ள்ட் விஷன் மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தது. தெரிவு செய்யப்பட்ட அனுகூலம் பெறுநர்களுக்கு உதவிகளை வழங்குவதனூடாக, அவர்களின் பொருளாதார சூழலை மேம்படுத்தி, பரந்தளவு சமூகத்துடன் அவர்களை இணைப்பதை ஐரோப்பிய ஒன்றியமும் வேர்ள்ட் விஷனும் எதிர்பார்ப்பாக கொண்டிருந்தன. இந்த உதவியினூடாக மாற்றுத்திறன் படைத்தவர்களின் பொருளாதார மற்றும் சமூக ஓரங்கட்டப்படல் குறைக்கப்பட்டிருந்தது.
1.6 மில்லியனுக்கு அதிகமான இலங்கையர்கள் அல்லது 1000 இல் 87 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்களாக காணப்படுகின்றனர். இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருந்த தரவுகளிலிருந்து இது கண்டறியப்பட்டிருந்தது. எந்தவொரு நபரும் உடல் அல்லது உள ரீதியான ஆற்றல்களில் காணப்படும் ஏதேனும் ஒரு குறைபாட்டின் காரணமாக, முழுமையாக அல்லது பகுதியாக தமது வாழ்க்கையின் சகல நடவடிக்கைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதை மாற்றுத்திறன் என்பது குறிக்கின்றது.
அணுகல், ஓரங்கட்டப்படல் போன்ற சவால்கள் காணப்பட்ட போதிலும், சுமார் 450,000க்கும் அதிகமான மாற்றுத்திறன் படைத்த இலங்கையர்கள் சுயதொழிலில் அல்லது பணியில் ஈடுபட்டு தமது சொந்த பராமரிப்புக்கும் சமூகத்துக்கும் பங்களிப்பு வழங்குகின்றனர்.
இந்தத் திட்டத்தின் இலக்கு என்பது பொருளாதார, சமூக ஒன்றிணைப்பினூடாக உள்ளடக்கமான அபிவிருத்திக்கு உதவுவதாக அமைந்துள்ளது. இந்த செயற்பாட்டுக்கு முதுபண்டாவின் கதை ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. முதுபண்டாவுடன் இணைந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தமது சொந்த அபிவிருத்தை எய்தியிருந்ததையும் இந்த திட்டத்தினூடாக காண முடிந்தது. வேர்ள்ட் விஷனினால் நடைமுறைப்படுத்தப்பட்டு பலன் பெற்ற பலரின் கதைகளில் ஒன்றாக முதுபண்டாவின் கதை அமைந்துள்ளது. இதனூடாக குறைந்த வசதிகள் படைத்த பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பொருளாதார வளங்களை பெற்றுக் கொள்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025