Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2025 மே 26 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் மாதத்தில் உங்களின் தேயிலை விளைச்சல் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த பெறுமதியான 26.3 மில்லியன் கிலோகிராம் (Mnkg) எனும் உயர் பெறுமதியை பதிவு செய்திருந்ததாக ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி அறிவித்துள்ளது. தேயிலை விளைச்சலின் மூன்று வலயங்களும் பெருமளவு விளைச்சல் உயர்வை பதிவு செய்திருந்ததுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த 21.6 மில்லியன் கிலோகிராம் என்பதுடன் ஒப்பிடுகையில் 21 சதவீத உயர்வை இவ்வாண்டில் பதிவு செய்திருந்தது. இதற்கு முன்னதாக 2021 ஏப்ரல் மாதத்தில் 30 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் பதிவாகியிருந்ததாக ஆசியா சியாகா அறிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்கான தேயிலை உற்பத்தியும் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத உயர்வை பதிவு செய்து 88.3 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் பதிவாகியிருந்த 104 மில்லியன் கிலோகிராம் தேயிலை விளைச்சலுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் பெறுமதி குறைவானதாக பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
தாழ்நில தேயிலை விளைச்சல் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. குறிப்பாக 48.5 மில்லியன் கிலோகிராம்களிலிருந்து 51.6 மில்லியன் கிலோகிராம்களாக உயர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து உயர்நில தேயிலை விளைச்சல் 20.2 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த 18 மில்லியன் கிலோகிராம்களுடன் ஒப்பிடுகையில் 17சதவீத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நில தேயிலை விளைச்சல் 15 சதவீதத்தால் உயர்ந்து 16.4 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் 2025 ஏப்ரல் மாதத்தில் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. மொத்தமாக 18.2 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.82 மில்லியன் கிலோகிராம்கள் உயர்வாகும்.
ஃபோர்ப்ஸ் அன்ட் வோல்கர் வாராந்த ஆய்வின் பிரகாரம், மொத்த தேயிலை ஏற்றுமதியைத் தவிர்ந்து, ஏனைய பிரிவுகளில் வளர்ச்சி பதிவாகியிருந்தது. தேயிலை பொதிகள், தேயிலை பைகள் மற்றும் உடனடி தேயிலை போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளுக்கு பரந்தளவில் அதிகளவு கேள்வி நிலவியதை அவதானிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் மாதத்தில் Free on Board (FOB) பெறுமதி ரூ. 1,760.31 ஆக உயர்ந்திருந்தது. இது 2024 ஏப்ரல் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 1745.45 உடன் ஒப்பிடுகையில் ரூ. 14.86 உயர்வாகும். நாணயப் பெறுமதியில் ஏற்றத்தாழ்வுகள் நிலவிய போதிலும், வெளிநாட்டு சந்தைகளில் உறுதியான வினைத்திறனை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 81.41 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 2.71 மில்லியன் கிலோகிராம்கள் உயர்வாகும்.
தேயிலை பொதிகள், தேயிலை பைகள் மற்றும் உடனடி தேயிலை போன்ற பிரிவுகளில் ஏற்றுமதி வளர்ச்சி பதிவாகியிருந்த போதிலும், மொத்த தேயிலை மற்றும் கிறீன் டீ போன்ற பிரிவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்ததாக ஃபோர்ப்ஸ் அன்ட் வோல்கர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச தேயிலை சந்தைகளில் நீண்ட கால அடிப்படையில் போட்டிகரத்தன்மையை பேணுவதற்கு, பெறுமதி சேர் தயாரிப்புகள் மற்றும் பன்முகப்படுத்தல் போன்றவற்றில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட வேண்டியமை முக்கியமானது என தொழிற்துறைசார் பகுப்பாய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஈராக் பெருமளவு இலங்கை தேயிலையை இறக்குமதி செய்திருந்ததுடன், அதனைத் தொடர்ந்து லிபியா இரண்டாமிடத்திலும், ரஷ்யா மூன்றாமிடத்திலும் அமைந்துள்ளன. இதர இறக்குமதியாளர்களான ஐக்கிய அரபு இராஜ்ஜியம், துருக்கி, சிலி, சீனா, சவுதி அரேபியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளும் இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதில் நாட்டம் காண்பித்திருந்தன.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago