2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மூளாய் வைத்தியசாலைக்கு ஜப்பானிய நோயாளர் காவு வண்டிகள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்துக்கு, இரு பாவித்த நோயாளர் காவு வண்டிகளை கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி கலந்து கொண்டார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மருத்துவ சூழல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பானிய அரசாங்கத்தின் Grassroots Human Security Grant Aid திட்டத்தின் கீழ் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஜப்பானிய அரசாங்கத்தினால் இரு பயன்படுத்திய நோயாளர் காவு வண்டிகளை 36,759 அமெரிக்க டொலர்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கியிருந்தது. சுமார் 1500 நோயாளர்கள் வாராந்தம் இந்த வைத்தியசாலை சேவைகளை பயன்படுத்துகின்றனர். இந்தத் திட்டத்தினூடாக வைத்தியசாலைக்கு உரிய காலப்பகுதியில் சுகாதார பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன், பின்தங்கிய பிரதேசங்களுக்கு நடமாடும் வைத்திய ஆலோசனை சேவைகளை பெற்றுக் கொடுக்கவும், நோயாளர் காவு வண்டி சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர பராமரிப்பு சேவைகள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை அருகாமையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் உதவுவதாக அமைந்துள்ளது.  முக்கியமாக, வட பிராந்தியத்தின் மக்களுக்கு அவசர சுகாதார பராமரிப்பு சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதாகவும் இந்த அன்பளிப்பு அமைந்துள்ளது.

தூதுவர் மிசுகொஷி தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதற்கு ஜப்பான் தன்னை அர்ப்பணித்துள்ளது. யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து விடுபடுவதற்கும், சமாதானம் மற்றும் உறுதித் தன்மையை ஏற்படுத்துவதும் ஜப்பானிய மானிய உதவித் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். இந்தப் பிராந்தியத்தின் மருத்துவ நிலையை மேம்படுத்துவதற்கு இந்த மானிய உதவித் திட்டம் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்ப்பதுடன், வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும் உதவியாக அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .