Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல், காதலர் தினத்தை ‘Love is much more’ எனும் தொனிப்பொருளின் கீழ் நாட்டு மக்களின் இதயங்களை இணைத்துக் கொண்டாடியது. பாரம்பரியமாக காதலர் தினத்தைக் கொண்டாடும் முறைக்கு அப்பாற்பட்டு, முதியோர் இல்லங்களில் வசிக்கும் சிரேஷ்ட பிரஜைகளைக் கண்டு, அவர்களுக்கு அன்பையும் எதிர்பார்ப்பையும் இந்த சிறப்பு நாளில் வழங்க இளைஞர்களை மொபிடெல் அழைத்துச் சென்றது.
‘Love is much more’ எனும் தொனிப்பொருளானது, மொபிடெலால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் அன்பையும் மகிழ்ச்சியையும் அதிகமாக எதிர்ப்பார்த்திடுவோருடன், அதிகமாகப் பகிர்ந்திடுதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு அக்கறை, இரக்கம், அனைத்துக்கும் மேலாக எல்லையற்ற அன்பினைத் கற்றுத்தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளமையாகும். இலங்கை முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களிலுள்ளவர்களுக்கு ஆதரவளிக்க மொபிடெல் ஆனது பல்கலைக்கழகங்கள், தேசிய இளைஞர் சங்கங்களுடன் கூட்டிணைந்து இந்தப் பாரிய முன்னெடுப்பை மேற்கொண்டது. முதியோர் இல்லங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு அவர்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிடும் மொபிடெலின் இன்னுமொரு முன்னெடுப்பின் மூலம் அவர்களின் மனதினையும் ஒளிமயமாக்கியது.
காதலர் தினத்தன்று, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மொபிடெல் ஆனது இளைஞர்களுடன் முதியோர் இல்லத்துக்குச் சென்று விளையாட்டுக்கள், உணவு வகைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் என முழுநாளையும் மகிழ்ச்சியுடன் கழித்தனர். ஆயிரக்கணக்கான இதயங்கள் மகிழ்ச்சியால் ஒளியூட்டப்பட்டன. சில முதியோர் தங்களது அன்புத் தருணங்களை பகிர்ந்தும், அன்பு பற்றிய உணர்வுகள், அன்பு அவர்களுக்கு அர்த்தப்படும் விதம் என்பவற்றை வெளிப்படுத்தினர்.
பல்லாண்டு காலமாக மொபிடெல் ஆனது அன்புக்குரியவர்களை இணைப்பது மட்டுமன்றி சிறுவர்கள், இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்த தலைமுறையினருக்கு அவர்களது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திட தேவையான ஆதரவினை வழங்கிடும் வகையிலான அக்கறையுடைய வலையமைப்பினை கட்டியெழுப்பிட பல பயனுள்ள முன்முயற்சிகளை எடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago