2025 மே 19, திங்கட்கிழமை

மொபிடெல் ஐந்து விருதுகளை வென்றது

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெலின் ஒப்பற்ற வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவை, அக்கறையை அங்கிகரித்து சமீபத்தில் சிங்கப்பூரில் இடம்பெற்ற 1ஆவது சிங்கப்பூர் வாடிக்கையாளர் ஈடுபாட்டு கருத்துக்களம்,  விருதுகள் வழங்கிடும் நிகழ்வில் 2 தங்க, 1 வெள்ளி, 2 வெண்கல விருதுகளை 1ஆவது SEACஇல் பெற்றுக் கொண்டது.

இது APAC Customer Engagement Pte. Ltd. (Singapore), A&A Enterprises Sri Lanka இனால் ACEF Global இன் அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இதன் நற்சான்றிதழ்களை மீண்டும் ஒரு முறை சர்வதேச மேடையில் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் உள்ளவர்களுடன் கடுமையான போட்டிகளின் மத்தியில் மொபிடெலுக்கு இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன் புதுமையான அணுகுமுறைக்குச் சான்றாக மொபிடெல் முறையே அதன் உபஹார சலுகை, தற்கொலை தடுப்புப் பிரசாரத்துக்காக தரவு, ஆராய்ச்சி பிரிவில் சிறந்த பயன்பாட்டுக்காக, தங்கம், வெண்கலத்தை வென்றது. Mobitel Selfcare Appக்கான சிறந்த டிஜிட்டல் உருமாற்றத்துக்கு இன்னுமொரு தங்க விருதையும் வென்றது.

சிறந்த வர்த்தக நாமத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளமைக்கான சந்தைப்படுத்தல் பிரசார பிரிவில் கேஷ் பொனான்ஸாவுக்கு வெள்ளி விருதையும் பெற்றுக் கொண்டது. இறுதியாக இதன் Master package இன் சிறந்த சந்தைப்படுத்தல் அறிமுகத்துக்காக வெண்கல பதக்கத்தையும் வென்றது.  

இதன் ஆரம்ப நிகழ்வானது பிராந்தியத்திலுள்ள தொழிற்றுறை தலைவர்கள் பலர் கலந்து கொண்டு வாடிக்கையாளர் ஈடுபாட்டின் புதிய பாணிகள் தொடர்பான தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை முக்கிய அம்சமாக இருந்தது.

அத்தோடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த வேலைகளுக்கு விருதுகள் வழங்கிடும் மாபெரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு தங்கள் வாடிக்கையாளர்களுடன் ஆழ்ந்த ஈடுபாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த கருத்துக்களைத் தேடும் சந்தைப்படுத்துபவர்களை முதன்மை இலக்காகக் கொண்டது.

புதுமையான வாடிக்கையாளர் ஈடுபாட்டு பணிகளைச் செய்பவர்களை இவ்விருதுகள் அங்கிகரிப்பதுடன் இந்தத் தொழிற்துறையின் உயர்மட்ட தலைவர்களுக்கு தங்கள் அனுபவங்களையும் வெற்றிகளையும் பிராந்தியத்திலுள்ள தமது சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X