2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

யாழுக்கு வருகின்றது Rose vila

Gavitha   / 2017 ஜனவரி 25 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக, நீண்டகால முதலீட்டுடன் நிர்மாணிக்கப்படவுள்ள ஓய்வு இல்லமான Rose Villa சிறந்த பாரம்பரிய இல்லத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கவுள்ளது.

இரு திட்டங்களாக முன்னெடுக்கவுள்ள ஏழு வீட்டுத் தொகுதிகளில் ஒரு கட்டமானது, ஓய்வுத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இது ஏற்கெனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான சாதாரமான மற்றும் அமைதியான சூழலில் அவை நிர்மாணிக்கப்படவுள்ளது.

நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில், ஆடம்பரமான ஓய்வு இல்லங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதற்கமைய தற்போது யாழ்ப்பாணத்தில், நீண்டகால முதலீட்டுத்திட்டமாக Rose Villa முன்னெடுக்கப்படுகின்றது. உடுவிலில் 6710 சதுரமீற்றர்கள் பரப்பளவு கொண்ட விவசாய நிலமானது, தற்போது இருப்பிடமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

இவ்விருப்பிடமானது, காங்கேசன்துறை பிரதான வீதி, வடக்கே 10 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். நகர், இணுவில் புகையிரத நிலையம், மருதனார் மடம் சந்தை மற்றும் சுன்னாகம் சந்தை ஆகியன 3 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளதுடன், கலாசார மற்றும் சமய வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகளும் இதனை சூழவுள்ளது. மேலும், Northern Central வைத்தியசாலையும் இச்சூழலில் அமைந்ததிருப்பது சிறப்பம்சமாகும்.

பாதுகாப்பு அம்பியூலன்ஸ் சேவை போன்றவைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுத்தொகுதியும் 89 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டதுடன், 6 சதவீத நிலப்பரப்பளை ஒவ்வொரு வீடும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வீடும் முழுமையாக பெரியளவிலான படுக்கையறையுடன் கூடிய குளியலறை, நவீன சமையலறையுடன் கூடிய வரவேற்பனற, சாப்பாட்டு அறை போன்றவற்றை உள்ளடக்கியதுடன், நாளாந்த நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கு ஏற்றதான சூழலையும் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X