2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். நகர சபைக்கு ரூ. 19.2 மில். வருமானம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நகர சபைக்கு 19.2 மில்லியன் ரூபாய் வருமானமும், 11.7 மில்லியன் ரூபாய் தேறிய இலாபமாகவும் பதிவாகியுள்ளதாக மாநகர ஆணையாளர் பி. வாகீசன் தெரிவித்தார்.

செப்டெம்பர் 6ம் திகதியுடன் நிறைவடைந்த நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தினூடாக இந்த வருமானம் பதிவாகியிருந்ததாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் வருமதி 29.45 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதில் அதிகளவான பக்தர்களின் பிரசன்னம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை, திருவிழாவை முன்னிட்டு நிறுவப்பட்டிருந்த தற்காலிக விற்பனையகங்கள், விளம்பர பதாதைகள் மற்றும் வாகனத்தரிப்பிடக்கட்டண அறவீடுகள் போன்றவற்றினூடாக இந்த வருமதி கிடைத்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X