2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

யட்டகம்பிட்டி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புலமைப்பரிசில்கள் அன்பளிப்பு

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனம் தமது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யட்டகம்பிட்டிய வி;த்தியாலயத்திற்கு கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டது.

கடந்த பல பத்து வருடங்களுக்கு முன்னர் பிரதேச ஆய்வாளரான பாஹியன் என்ற சீனத் தேரர் ஒருவர் இந்த பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் அவரது பெயரான பாஹியன்கல என்ற பெயர் இந்த கிராமத்திற்கு வந்துள்ளது. குறித்த பகுதியில் தற்போது சீன அரசு வீட்டுத் திட்டமொன்றை மேற்கொண்டு இந்த பகுதியிலுள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தேரரது பல நினைவுச் சின்னங்கள் இந்த கிராமத்தில் காணப்படுவதனால் யட்டகம்பிட்டி வித்தியாலயத்திற்கு ஒரு கட்டடத்தை அமைத்து அன்பளிப்புச் செய்துள்ளதுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நீண்டகால உறவினை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கை – சீனாவிற்கு இடையிலுள்ள தொடர்ச்சியான உறவினை நினைவுகூறும் விதமாக சீன அரசின் கீழுள்ள சீன இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் யட்டகம்பிட்டி வித்தியாலய வளாகத்திற்குள் ஞாபகப் பலகையொன்றும் அமைக்கப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன், அந்த பாடசாலையின் அதிபர் இந்திரஜித் ஜனக்க சேனாதீர உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் கே.டி. கருணாரத்ன பாடசாலையின் முன்னாள் ஆசிரியரான ஏ.உதம்யாவல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்தர்பத்தில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழுவினால் கடந்த இறுதித் தவணையின் போது சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களில் மூன்று சிறந்த மாணவர்களைத் தெரிவு செய்து 10,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ச்சியேன் ஹாஓஜுன், எமது நிறுவனம் உலகம் முழுவதும் நன்மதிப்புப் பெற்ற ஒரு நிறுவனமாகும். எமது நிறுவனம் தற்போது சர்வதேச ரீதியாக பல நாடுகளில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. எனினும் நீண்டகால உறவைப் பேணும் நாடு என்ற வகையில் இலங்கை ஒரு முக்கிய நாடாகும். இதனால் இலங்கையின் மின்சாரம் மற்றும் நீர்வளங்கள் மேம்பாடு தொடர்பில் பல்வேறு விதங்களில் கூடுதலான பங்களிப்பினை நாம் வழங்கி நாடு என்ற ரீதியில் அபிவிருத்தியை நோக்கிய பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யட்டகம்பிட்டி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் கூறுகையில், இவ்வாறான அடிப்படை வசதிகள் குறைந்த மற்றும் குறைந்த வருமானம் பெறும் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குவது குறித்து சீன இயந்திர பொறியியல் கூட்டுத் தாபனத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X