Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் 2020’ எனும் தொனிப்பொருளில் சமூக வலுவூட்டல் அமைப்பான யுகசக்தியால் கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 7,000 பேர் வரை பங்கேற்ற இப் பேரணியில் சுமார் 90 சதவீதமானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன், நியுசிலாந்தின் உயர் ஸ்தானிகர் சேனக சில்வா மற்றும் யுகசக்தி பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி. செலினா பிரேம் குமார் ஆகியோரும் இந்த நடையில் பங்கேற்றனர். தமிழ், சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட உரிமை கோரிக்கைகள் அரங்கத்தில் வாசிக்கபட்டு மனு வடிவில் இரு சிறுவர்களால், யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் நா. வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.
முற்றவெளி பகுதியில் ஆரம்பமாகிய இந்த நடை, யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம் வரை இடம்பெற்றது. இதன் போது வரவேற்புரை, முடிவுரை ஆகியன தமிழ், சிங்கள மொழிகளில் சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும். சிறுவர்கள், பெண்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த நடை இடம்பெற்றது. பெண்களுக்கு வலுவூட்டல் என்பது தொடர்பில் இந்தத் திட்டத்தினூடாக முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. குடும்பங்கள் பொருளாதார, சமூக ரீதியில் பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டதுடன், சிறுவர்களுக்கு பாதுகாப்பான சிறுவர் பராயத்தை அனுபவிப்பது, பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்துவது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. மேலும், சிறுவர் பாதுகாப்பு, வலுவூட்டலை தக்க வைத்துக் கொள்வதற்கு பெண்கள் வலுவூட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago