Editorial / 2020 மே 05 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் நியு யோர்க் நகரில் இடம்பெற்ற சர்வதேச ரீதியில் பெருமைக்குரிய Celent Model Insurer விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் கௌரவிக்கப்பட்டிருந்தது. இதனூடாக சர்வதேச ரீதியில் காணப்படும் பல காப்புறுதி நிறுவனங்கள் மத்தியில் தன்னை வேறாக்கி அடையாளப்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Celent என்பது நிதிச் சேவைகள் துறை தொடர்பில் சர்வதேய ஆய்வுகள் மற்றும் ஆலோசனை போன்றவற்றை முன்னெடுக்கும் நிறுவனமாகும். Oliver Wyman இன் ஒரு அங்கத்துவ நிறுவனமாகவும் திகழ்கின்றது. Celent இன் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது, காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களை அவற்றின் மிகச் சிறந்த தொழில்நுட்ப செயற்பாடுகளுக்காக ‘model insurers’ என தெரிவு செய்து கௌரவிக்கின்றது. இந்த விருதுக்கு தெரிவு செய்யப்படுவதற்கு, குறித்த தொழில்நுட்ப செயற்பாடுகள் தெளிவான வியாபார அனுகூலங்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் அல்லது செயற்படுத்தல் சிறப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் தனது legacy கட்டமைப்பை புதிய எதிர்காலத்தை உறுதி செய்யும் கட்டமைப்புக்கு மாற்றும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ‘Project Electric' க்காக 0 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டமைப்பு டிஜிட்டல் ஆற்றல்களை கொண்டுள்ளதுடன், back-end முதல் front-end வரையான செயற்பாடுகளை மிருதுவான முறையில் முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு எமது சேவைத்தரத்தை மேம்படுத்தி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த 70 க்கும் அதிகமான கிளைகளின் 4000 க்கும் அதிகமான விற்பனை செயலணியினரினூடாக வாடிக்கையாளர்களுக்கு தடங்கலில்லாத சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago