Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 05 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபத்து நிறைந்த இந்தக் காலப்பகுதியில், யூனியன் அஷ்யூரன்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கொவிட்-19 இலவச ஆயுள் காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்த இலவசக் காப்புறுதி, ஏற்கெனவே காணப்படும் காப்புறுதிதாரர்களுக்கும் புதிய காப்புறுதிதாரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த ஆயுள் காப்புறுதியின் பெறுமதி, ஆகக்கூடியது ஒரு மில்லியன் ரூபாய் வரை அமைந்திருக்கும்.
இலங்கையில், கொவிட்-19 தொற்றுப் பரவ ஆரம்பித்தவுடன், தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்கு வைத்தியசாலை, பண அனுகூலத்தை அறிவித்த முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. சமூகத்தின் புதிய, வழமையான நிலையில், காப்புறுதிதாரர்களும் அவர்களின் குடும்பத்தாரும், உறுதியற்ற நிலைகள், சவால்களுக்கு முகங்கொடுப்பதை உறுதிசெய்து, யூனியன் அஷ்யூரன்ஸ் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது.
ஆயுள் விநியோகப் பிரிவின் பொது முகாமையாளர் செனத் ஜயதிலக, கருத்துத் தெரிவிக்கையில், ''கொவிட்-19 பரவல் என்பது, உலகளாவிய ரீதியில் காணப்படும் சுகாதார, பொருளாதார, சமூக அவசரகால நிலையாகும். உலகளாவிய ரீதியில், பாரிய சுகாதார நெருக்கடி நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரச் சிக்கல்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர். இலங்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சகல பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் மத்தியில், ஓர் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதைய நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு, பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், எமது காப்புறுதிதாரர்களுக்கு மேலதிக காப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை, நாம் முன்னெடுத்துள்ளோம். இதனூடாக, காப்புறுதிதாரர்களுக்கு இந்த நெருக்கடியான சூழலில், தமது குடும்பத்தாரின் நிதி நிலையை உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தக் காப்புறுதி, ஏற்கெனவேனவே எம்முடைய வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் என்று மட்டுப்படுத்தாமல், புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுவதால், சகல இலங்கையர்களுக்கும் இதைப் பெற்று, தமது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாகப் பேணிக் கொள்ள முடியும்'' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025