Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 நவம்பர் 16 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், UA Circle of Excellence எனும் விசேடமான பாங்கசூரன்ஸ் வெகுமதித் திட்டத்தை இலங்கையின் காப்புறுதித் துறையில் அறிமுகம் செய்துள்ளது. சிறப்பாக செயலாற்றும் காப்புறுதி உறவுபேண் அதிகாரிகள் (IRO), பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “எமது விற்பனை செயலணியினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கௌரவித்து வெகுமதியளிக்கும் வகையிலும், தொழிற்துறையில் அவர்களுக்கு சிறந்த வெகுமதிகள் மற்றும் கௌரவிப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் UA Circle of Excellence அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு வெகுமதியளிப்பதுடன், இந்தத் திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய ஆர்வத்துடன் செயலாற்றும் செயலணியைக் கட்டியெழுப்பி, உயர் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் தேவை மதிப்பாய்வுகளை மேற்கொள்வது மற்றும் சேவை விநியோகங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் இலக்காக அமைந்துள்ளது.” என்றார்.
UA Circle of Excellence இனூடாக, பரந்தளவு நிதி, வாழ்க்கைத்தரம், கௌரவிப்பு, திறன் விருத்தி மற்றும் அங்கத்துவ வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் பரந்தளவு அனுகூலங்களில் சொகுசு வாகனங்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், பெருமளவு பண வெகுமதிகள், காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும் கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகள், பிரத்தியேகமான Circle of Excellence வெகுமதிகள் மற்றும் பிரத்தியேகமான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களினூடாக தொழில்நிலை முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் போன்றன வழங்கப்படும்.
பெருமளவு கௌரவிப்புகளைப் பெற்றுள்ள யூனியன் அஷ்யூரன் ஸ் பாங்கசூரன்ஸ் பிரிவு, கடந்த காலங்களில் பெருமளவு வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கையின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவைகள் வழங்குநராக அமைந்துள்ளதுடன், நான்கு முன்னணி கிளைப் பங்காளர்களின் 360க்கும் அதிகமான கிளைகளினூடாக சேவைகளை வழங்குகின்றது.
மேலும், இலங்கையின் சிறந்த ஐந்து வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் வரிசையில் யூனியன் அஷ்யூரன்ஸ் உள்ளடங்கியுள்ளது. 13 பில்லியன் GWP பெறுமதியைக் கடந்துள்ளதுடன், நான்காவது மிகப் பெரிய வழமையான புதிய வியாபார தவணைக்கட்டண பிறப்பிப்பாளராக அமைந்துள்ளது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago