2025 ஜூலை 10, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது அர்பணிப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது

Editorial   / 2020 மே 12 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

COVID-19 தொற்றுப் பரவல் காரணமாக சமூகத்தில் தொடர்ந்து எழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, சகல பங்காளர்களின் நலனை பாதுகாப்பது தொடர்பில் தன்னை அர்ப்பணித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக அவசர நிலை தொடர்பில் எழுந்துள்ள சவால்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்தும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அர்ப்பணிப்பின் அங்கமாக, தமது காப்புறுதிகளில் சுகாதார அனுகூல இணைப்புகளில் COVID-19 க்கு எதிரான காப்பீட்டை உள்வாங்கிய முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனும் பெருமையை கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் தினசரி வைத்தியசாலை அனுமதி பண அனுகூலத்தை அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் காலப்பகுதியிலும் வழங்குகின்றது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்த காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்சின் காப்புறுதி சேவைகளை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் சௌகரியமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் ஆயுள் காப்புறுதி பிரிவில் முன்னோடியாக திகழ்வதுடன், தமது டிஜிட்டல் சேவை சென்றடைவை மேலும் விஸ்தரித்துள்ளது. இதனூடாக புதிய வியாபாரங்கள் மற்றும் பெறுமதித் தொடருக்கு சேவைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளும் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கை சமூகத்தில் தொடர்ச்சியாக காப்புறுதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயலாற்றி வருகின்றது.

நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் எமது பெறுமதி வாய்ந்த காப்புறுதி முகவர்கள் மற்றும் தலைவர்கள் நிறுவனத்தின் நிலைபேறாண்மை மற்றும் வளர்ச்சியில் முக்கிய தூண்களாக அமைந்துள்ளனர் என்பதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.  இந்த காலப்பகுதியில் நிறுவனத்தின் காப்புறுதி முகவர் செயலணியினருக்கு பெறுமதி வாய்ந்த வருமான மூலத்தை உறுதி செய்யும் வகையில், பொருளாதார சவால்கள் நிறைந்த இந்த காலப்பகுதியில், அவர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட வருமான மாற்றீட்டு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .