2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் ஊழியர் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையில் பாங்கசூரன்ஸ் சுப்பர் லீக் 202

J.A. George   / 2023 ஜூலை 12 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல்தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், பாங்கசூரன்ஸ் சுப்பர் லீக் 2023 நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. ஊழியர் ஈடுபாட்டை மேம்படுத்துவதையும், நேர்த்தியான பணியிடக் கலாசாரத்தினூடாக ஊழியர்களிடையே சுமூகமான செயற்பாடுகள் மற்றும் விநோத அம்சங்களை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஜுன் 10ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றதுடன், சகல பாங்கசூரன்ஸ் பிரிவுகளைச் சேர்ந்த அணியினர் இதில் பங்கேற்றிருந்தனர். ஒன்றிணைந்த மற்றும் நட்பான போட்டிச் சூழலை உறுதி செய்வதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வுகளில் கிரிக்கட் மற்றும் உதைப்பந்தாட்டம் போன்ற செயற்பாடுகள் விறுவிறுப்பை வழங்கும் வகையில் அடங்கியிருந்தன. ஊழியர்களுக்கு தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான கட்டமைப்பாக இந்த நிகழ்வு அமைந்திருந்ததுடன், உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதாகவும் அமைந்திருந்தன.

மேலும், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான யூனியன் அஷ்யூரன்ஸின் அர்ப்பணிப்பு என்பது, சகல பாலினத்தவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சமத்துவமான வாய்ப்புகளை வழங்குவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக இந்நிகழ்வுகள் அமைந்திருந்தன.

கிரிக்கட்டில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பாங்கசூரன்ஸ் பிரிவின் ‘50K Hunters’ சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் பிரிவின் Royal ‘Strikers’ இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பாங்கசூரன்ஸ் பிரிவின் க்ளரன்ஸ் டிரோன் போட்டி நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். உதைப்பந்தாட்டத்தில், வெற்றியீட்டிய அணியில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பாங்கசூரன்ஸ் பிரிவின் சஷிகா செவ்வந்தி மற்றும் திஷானி தில்ஹாரா, யூனியன் வங்கி பாங்கசூரன்ஸ் பிரிவின் நிமேஷா லக்மினி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் சர்மிளா சாமுவேல் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அனைத்து வெற்றியாளர்களுக்கும் பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்பட்டதுடன், ஊழியர் சிறப்பை பாராட்டும் யூனியன் அஷ்யூரன்ஸின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

200 க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன், யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் சுப்பர் லீக் 2023, பணியிட நலன் பேணலை மேம்படுத்தும் நிறுவனத்தின் முன்னேற்றத்தை மேலும் வலியுறுத்துவதாக அமைந்திருக்காமல், சிறந்த திறமை மற்றும் வெற்றியை நோக்கிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

இலங்கையின் மாபெரும் பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. பாங்கசூரன்ஸ் பயணம் ஆரம்பிக்கப்பட்டது முதல், 7 முன்னணி வங்கிகளுடன் உறுதியான, மூலோபாயமான உறவுகளை நிறுவனம் கட்டியெழுப்பி, நாட்டின் சகல பாகங்களுக்கும் பாங்கசூரன்ஸ் சேவையை வியாபித்து, சமூகத்தில் காணப்படும் நிதிப் பாதுகாப்பு இடைவெளியை குறைப்பதில் பங்களிப்பு வழங்குகின்றது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது.

துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 19.4 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 57.7 பில்லியனையும், 2023 மார்ச் மாதமளவில் கொண்டிருந்தது.

இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது.

நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X