Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், நூற்றுக் கணக்கான இலங்கையர்களுக்கு தனது புத்தாக்கமான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளினூடாக வலுவூட்டிய வண்ணமுள்ளது. யூனியன் அஷ்யூரன்சின் வாடிக்கையாளர்களுக்கு 2020ஆம் ஆண்டில் தமது எதிர்பார்ப்புகளை மேலும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், ‘யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிரயாணம், விடுமுறை, ஆரோக்கியம், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றில் 40% வரை விலைக்கழிவுகளை முன்னணி வர்த்தக நாமங்களுடன் இணைந்து வழங்க கைகோர்த்துள்ளது. யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ் திட்டம் 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2020 டிசெம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் விலைக்கழிவுகளையும் சேமிப்புகளையும் பெற்றுக் கொள்வதை உறுதி செய்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றுக்கு 2020 மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னதாக தம்மை பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகளை அனுபவிக்க முடியும். மாதாந்த தவணைக்கட்டணமாக ரூ. 15000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான யூனியன் அஷ்யூரன்சின் ஆயுள் காப்புறுதித் திட்டத்துக்கு மாத்திரமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.
ஹிக்கடுவ, ஹபரண, கண்டி போன்ற நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சினமன் ஹோட்டல் அன்ட் ரிசோர்ட்ஸ் தொடரில் 30%, 40% போன்ற விலைக்கழிவுகளை காப்புறுதிதாரர்களை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் உள்நாட்டு விமான பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும் வகையில் சினமன் எயார் தெரிவு செய்யப்பட்ட விமான சேவைகளுக்கு 20% வரை விலைக்கழிவுகளையும், சர்வதேச ரீதியில் எயார் ஏசியா ஊடாக 10% வரை விமானச்சீட்டு மற்றும் ஹோட்டல் பக்கேஜ்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. காப்புறுதிதாரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில், நவலோக பிரீமியர் வெல்னஸ் சென்ரரில் வழங்கப்படும் பெருமளவு சுகாதார சேவைகளுக்கு பெறுமதி வாய்ந்த விலைக்கழிவுகளை வழங்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது.
நவீன தொழில்நுட்ப சாதனங்கள் இன்றைய வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக அமைந்துள்ளன. அவ்வாறான நவீன சாதனங்களை JKOA இலிருந்து கொள்வனவு செய்யும் போது அலைபேசிகள், புரொஜெக்டர்கள், ஸ்பீக்கர்கள், போட்டோப்பிரதி இயந்திரங்கள் போன்றவற்றுக்கு விசேட விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், காப்புறுதிதாரர்களுக்கு Vision Care இல் மூக்குக் கண்ணாடிகள், சன் கிளாஸ்கள் மற்றும் செவிக்குறைபாட்டு சாதனங்கள் போன்றவற்றுக்கு 10% விலைக்கழிவை பெற்றுக் கொள்ளலாம். மேலும், ராஜபக்ஷ ஒப்டிஷியன்சிலிருந்து மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சன் கிளாஸ்களை கொள்வனவு செய்யும் போது 15% விலைக்கழிவை பெறலாம்.
வாழ்க்கை முறைக்கு அவசியமான சகல அத்தியாவசிய அம்சங்களையும் உள்வாங்கி இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக காப்புறுதிதாரர்களுக்கு விசேடமான 2020 வருடத்தை அனுபவிக்க யூனியன் அஷ்யூரன்ஸ் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
23 minute ago
58 minute ago