2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யூனியன் வங்கி, IBSL புரிந்துணர்வு உடன்படிக்கை

Freelancer   / 2025 மே 23 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி மற்றும் இலங்கை வங்கியியலாளர் நிறுவகம் (IBSL) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. வங்கியியல் மற்றும் நிதியியல் பிரிவில் உயர் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உயர் பிரயோக பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.

இந்த உடன்படிக்கையை யூனியன் வங்கியின் பிரதம மக்கள் மற்றும் மாற்றியமைப்பு அதிகாரி ஜயந்த அமரசிங்க மற்றும் இலங்கை வங்கியியலாளர் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சி.பி.ஏ. கருணாதிலக ஆகியோர் வைபவ ரீதியாக பரிமாறிக் கொண்டனர்.

கல்விசார் அறிவை நிஜ உலக அனுபவத்துடன் இணைக்கும் யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. அத்துடன் IBSL இன் மாணவர்களுக்கு நிறுவகத்தின் பிரயோக பயிற்சி வழிகாட்டல்களுக்கமைவான பிரயோக பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X