Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 12 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகத்துக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் தனது கூட்டாண்மை கொள்கையின் பிரகாரம், Covid-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையிலான செயற்பாடுகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.
மத்திய கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகத்தாரை நிதித் தாக்கங்களிலிருந்து மீள்வதற்காக 2020 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிதிசார் நிவாரண திட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம் மார்ச்/ஏப்ரல் மாதங்களுக்கான கடன் அட்டை கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டிருந்ததுடன், கடன்கள் மற்றும் குத்தகைகள் போன்ற பிரத்தியேக கடன் வசதிகளை மீளச் செலுத்தும் கால எல்லையையும் நீடித்திருந்தது.
வங்கியின் கூட்டாண்மை, சிறிய,நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் சில்லறை வங்கியியல் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நிதிசார் நிவாரண திட்டத்தில், 1 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த பிரத்தியேக கடன்களுக்கு மூன்று மாத காலம் வரை ஒத்தி வைக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகை வழங்கப்படுகின்றது. ரூ. 50000 வரையான கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களுக்காக ஆகக்கூடிய பொருத்தமான வருடாந்த வட்டி வீதம் 15% ஆக குறைக்கப்பட்டிருந்தது. மீளச் செலுத்த வேண்டிய ஆகக்குறைந்த தொகையும் 4% இலிருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு கடன் அட்டை மற்றும் கடன்களுக்கான காலம் கடந்த கொடுப்பனவுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் மாதம் முழுவதிலும் Pickme.lk உடன் கைகோர்த்து வங்கியின் கடன் அட்டைதாரர்கள் கொள்வனவு செய்திருந்த அத்தியாவசிய பொருட்களுக்கு 20% சேமிப்பையும் யூனியன் வங்கி வழங்கியிருந்தது.
சுயதொழிலில் ஈடுபடுவோர், வெளிநாட்டு நாணயத்தில் வருமானமீட்டுவோர் (தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள்), சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (விவசாயம், உற்பத்தி, சேவைகள், நிர்மாணம் மற்றும் வர்த்தக துறைகள்) மற்றும் சுற்றுலாத்துறை, நேரடி மற்றும் மறைமுகமாக ஏற்றுமதியுடன் தொடர்புடைய வியாபாரத்தில் ஈடுபடும் கூட்டாண்மை நிறுவனங்கள், ஆடைத் தொழிற்துறை நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சரக்கு கையாளல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட கடன்களின் முதல் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவதற்கு 6 மாதங்கள் வரை சலுகைக் காலத்தை யூனியன் வங்கி வழங்கியுள்ளது.
மேலும், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள், சிறியளவிலான வர்த்தகர்கள் போன்ற துறையினருக்கு உடனடியாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், காசோலை மீளத்திரும்பலுக்கான கட்டணம் அறவீடு மற்றும் காசோலை கொடுப்பனவை நிறுத்தல் போன்றவற்றுக்கான கட்டணங்கள் அறவிடுவதை 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளது.
ரூ. 500000 க்கு குறைவான பெறுமதிகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகளுக்கான செல்லுபடியாகும் காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், 2020 ஏப்ரல் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்க நகை அடகுச் சேவைக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
33 minute ago
59 minute ago