2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யூனியன் வங்கி பிரதம நிதி அதிகாரியாக ஷானக அபேவர்தன நியமனம்

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி தனது பிரதம நிதி அதிகாரியாக (CFO) ஷானக அபேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை பதிவு செய்து இயங்கியுள்ள நிதித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிபுணரான அபேவர்தன, நிதி மூலோபாயம், அறிக்கையிடல் மற்றும் வணிக வினைத்திறன் செம்மையாக்கல் ஆகியவற்றில் 30 வருடங்களுக்கு மேலான உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். நிதிசார் வினைத்திறன் மேம்படுத்தல், நிறுவனசார் மாற்றங்களை மேற்கொள்ளல் மற்றும் வங்கிச் சூழல்களில் நிலைபேறான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொண்டதில் இவரின் தொழில்நிலை உறுதியான பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இலங்கை சணச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிதி அதிகாரியாக அண்மையில் அபேவர்தன செயலாற்றியிருந்தார். இதன் போது, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக, முக்கியமான நிதிசார் மறுசீரமைப்புகள், வியாபார வளர்ச்சி மற்றும் மூலோபாய மாற்றியமைப்பு செயற்பாடுகள் பலதை முன்னெடுத்திருந்தார். தேசிய அபிவிருத்தி வங்கி (NDB), ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் Mashreq வங்கி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் முக்கிய நிலைகளையும் வகித்திருந்தார்.

இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் அங்கத்தவராக திகழ்வதுடன், பிரான்ஸ் SKEMA Business School இடமிருந்து Master of Science (MSc) பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திடமிருந்து முகாமைத்துவ நிறைவேற்று டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

நியமனம் தொடர்பில் யூனியன் வங்கி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் மூலோபாய வளர்ச்சி மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் ஷானகவை வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவத்துடன், உறுதியான நிதிசார் உள்ளம்சங்கள் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்கள் போன்றன, எமது நீண்ட கால நோக்கை நோக்கி பயணிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.” என்றார்.

டிஜிட்டல் ரீதியில் புத்தாக்கம், வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட வங்கியியல் பங்காளராக திகழும் பயணத்தில், தனது தலைமைத்துவ அணியை வலிமைப்படுத்துவதில் யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X