Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள செயற்திட்டங்களுக்கு 100% முழுமையான நிதி வசதியளிப்பை வழங்கும் முதலாவது தீர்வாக யூனியன் வங்கி Home Loan Plus அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப மூலதனம் அவசியமற்ற நிலையில், வீட்டு உரிமையாளர்களுக்கு தமது கனவு இல்லத்துக்கு இலகுவாக மாறிக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்த புத்தாக்கமான தீர்வில், சம்பளம் பெறும் நிபுணர்கள், வியாபார உரிமையாளர்கள் மற்றும் சொத்து முதலீட்டாளர்கள் என பரந்தளவு வருமான வகைகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க மீளச் செலுத்தும் திட்டங்கள் அடங்கியுள்ளன.
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க மாதாந்த தவணைக் கட்டணங்கள், வட்டி மட்டும் செலுத்தல்களுடன் ரொக்கப் பணத்தை மீளச் செலுத்தல் அல்லது முதலீட்டு வருமானத்துக்கு பொருத்தமான வகையிலமைந்த மூலதன மீளச் செலுத்தும் கட்டமைப்புகள் போன்றன அடங்கியுள்ளன. இவை சொகுசு இல்ல உரிமையாண்மையை மிகவும் இலகுபடுத்தியுள்ளதுடன், ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் மற்றும் பிரைம் குரூப் அடங்கலாக முன்னணி சொத்து வடிவமைப்பாளர்களினூடாக யூனியன் வங்கி Home Loan Plus ஐ பெற்றுக் கொள்ள முடியும்.
யூனியன் வங்கியின் கார்ட்கள் மற்றும் சில்லறைத் தீர்வுகள் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி – உப தலைவர் மலிந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் வீட்டு நிதிவசதியளிப்பு பிரிவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தீர்வாக யூனியன் வங்கி Home Loan Plus அமைந்துள்ளது. ஆரம்பத்தில் மூலதனமிடுவதற்கான தேவையை இல்லாமல் செய்து, நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் தெரிவுகளை வழங்கி, பல இலங்கையர்களுக்கு ப்ரீமியம் சொத்தொன்றின் உரிமையாளராகும் கனவை நனவாக்க நாம் முன்வந்துள்ளோம்.” என்றார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago