2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரின் பான் பசுபிக் ஹொட்டலில் அண்மையில் நடைபெற்ற 7ஆவது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் ஐம்பது சிறந்த சந்தைப்படுத்தல் நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக செயற்பாடுகளுக்கானப் பொது முகாமையாளர் ருக்மன் வீரரட்னவும் இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் சிறந்த 50 சந்தைப்படுத்துநர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டிருந்தார்.  

ஆசியாவின் சிறந்த சந்தைப்படுத்துநர் தரவரிசை என்பது அதிகளவு தகைமைகளைக் கொண்டவர்களை கொண்டுள்ளது. சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிறந்த பணியைப் பதிவு செய்யும் நபர்கள் இந்தக் கௌரவிப்புக்காகத் தெரிவு செய்யப்படுவார்கள். உலகளாவிய ரீதியில் வௌ;வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மத்தியஸ்த்தர்களாகச் செயலாற்றுவதுடன், தமது இறுதி தெரிவையும் மேற்கொள்வார்கள்.

இலங்கையிலுள்ள அனுபவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் அதிகாரிகளில் ஒருவராக வீரரட்ன திகழ்கிறார். காப்புறுதித்துறையுடன் பெருமளவு ஐக்கியம் வாய்ந்தவர் என்பதுடன், அதன் வளர்ச்சிக்கு பெருமளவான பங்களிப்பை 30 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறார். இவரின் தொழில் நிலையில், இவர் பல சிரேஷ்ட சந்தைப்படுத்தல் நிலைகளை வகித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றிய அனுபவத்தைக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் “Redefining The World of Work.Courage will pay Dividends”' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழுநிலை கலந்துரையாடலில் இவர் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார்.

'ஆசியாவின் சிறந்த சந்தைப்படுத்தல் அதிகாரிகளில் ஒருவராகத் தரப்படுத்தப்பட்டுள்ளமையையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். எனது அணி அங்கத்தவர்கள் இன்றி, என்னால் எதனையும் எய்த முடியாது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து ஒரு அணியாக பயணித்த பயணமாக இது அமைந்துள்ளது. யூனியன் அஷயூரன்ஸ் அணிக்கு இந்த வெற்றி உரித்தாகும் என நாம் கருதுகிறோம்' என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், 'ஆர்வமுள்ள சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி எனும் வகையில், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகிய பிரிவுகளில் ஆழமான அறிவை கொண்டுள்ளார்.

அத்துடன், இன்றைய சந்தையில் காணப்படும் சந்தைப்படுத்தல் சவால்களை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் அறிந்து வைத்துள்ளார். இலங்கையில் நிபுணத்துவம் வாய்ந்த காப்புறுதித்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. துறைக்கு அவர் வழங்கும் பங்களிப்புகள் என்பது பங்காளர்களுக்கு உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X