2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ராகம வைத்தியசாலையை மெருகேற்றம் செய்துள்ள ஃபஷன் பக்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 16 விற்பனை காட்சியறைகளைக் கொண்ட முன்னணி ஆடை விற்பனையகமான ஃபஷன் பக், தனது தொடர்ச்சியான சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் மற்றுமொரு அங்கமாக, ராகம வைத்தியசாலையில் வழிகாட்டல் பதாதைகளை பதித்திருந்தது. இதன் மூலம் பொது மக்களுக்கு இலகுவாக வைத்தியசாலையின் வெவ்வேறு பகுதிகளை இனங்கண்டு கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

'ராகம வைத்தியசாலையில் ஃபஷன் பக் முன்னெடுத்திருந்த இரண்டாவது சமூகப் பொறுப்புணர்வு செய்திட்டமாக இது அமைந்திருந்ததுடன், இதற்கு முன்னதாக போதனா பிரிவைச் சேர்ந்த மகப்பேற்றுப் பிரிவை மறுசீரமைப்புச் செய்திருந்தது. சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், சமூகத்துக்கு மீள வழங்குவது தொடர்பில் நாம் பெருமையடைகி;றோம். பொதுச் சேவைகளுக்கு மேலாக, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் நாம் எமது பங்களிப்பை வழங்கி வருகிறோம்' என ஃபஷன் பக் பதில் பொது முகாமையாளர் கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 'எந்தவொரு சமூகத்திலும் பொருளாதாரத்திலும் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக அமைந்துள்ளது. குறிப்பாக பொது மற்றும் தனியார் துறை ஆகியன பொது மக்களின் நலனில் தமது ஈடுபாட்டை காண்பிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது' என்றார்.

நாட்டில் இது போன்ற செயற்பாடுகளை இதற்கு முன்னரும் ஃபஷன் பக் முன்னெடுத்திருந்தது. ஓவிட்டகம மஹாவித்தியாலயத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, தும்பே கனிஷ்ட வித்தியாலயத்துக்கு கணினிகூடம் அன்பளிப்பு செய்தது முதல், தம்மிக கித்துல்கொட புலமைப்பரிசில் மையத்துக்கான அனுசரணை ஆகியன முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்துடன், மஹாரகம புற்றுநோய் வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே, கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றில் புனரமைப்பு செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கியிருந்தமை மற்றும் பல்வேறு சூழல்சார் செயற்திட்டங்களில் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூகளவில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக கம்பனி வௌ;வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஃபஷன் பக் முன்னெடுக்கும் விருதை வென்ற மற்றுமொரு சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமாக சிசு திரிகம அமைந்துள்ளது. இதன் மூலமாக இதுவரையில் 20 பாடசாலைகளைச் சேர்ந்த 7000 மாணவர்கள் அனுகூலம் பெற்றுள்ளனர். நாடு முழுவதையும் சேர்ந்த 120 பாடசாலைகளுக்குச் சென்றடைந்து அதனூடாக 100,000 மாணவர்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பது என்பது இந்தத்திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. 'நாம் இந்த திட்டங்களை நாடு முழுவதையும் சேர்ந்த 120க்கும் அதிகமான பாடசாலைகளில் முன்னெடுக்கவுள்ளதுடன், 100,000 மாணவர்களுக்கு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்' என ஃபஷன் பக் பணிப்பாளரும், சிசு திரிமக நிகழ்ச்சித்திட்டத்தின் ஸ்தாபகருமான ஷபீர் சுபியன் தெரிவித்தார். 

'ஒரு தடவை மட்டும் முன்னெடுக்கக்கூடிய செயற்திட்டங்களுக்குப் பதிலாக, நீண்ட காலம் நிலைத்திருந்து தெளிவான அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய நிலையான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுப்பது எமது இலக்காகும். சிசு திரிமக செயற்திட்டத்தின் மூலமாக, எமது செயற்திட்டங்கள் அனைத்தும் தெளிவான ஒரே கட்டமைப்பில் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன், பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் தெளிவான அடையாளத்தையும் ஃபஷன் பக் நிறுவனத்துக்கு வழங்கும். அத்துடன், பொறுப்பு வாய்ந்த தேசிய செயற்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்குவது தொடர்பில் எமது வாடிக்கையாளர்களுக்கு தன்னிறைவையும் வழங்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

1994 இல் தனது வர்த்தக செயற்பாடுகளை பங்காண்மை வர்த்தகமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த ஃபஷன் பக், தற்போது 16 காட்சியறைகளை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஃபஷன் பக், தற்போது 1250 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகங்களில் ஒன்றாக திகழ்வதுடன், மாற்றமடைந்து வரும் வாழ்க்கை முறைக்கமைவாக நவநாகரீக ஆடைகளையும் வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X