2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ரேணுகா தேங்காய் பால் பவுடர் தயாரிப்புக்கு SLS தரச்சான்றிதழ்

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரேணுகா தேங்காய் பால் பவுடர் தயாரிப்புக்கு SLS தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த SLS தரச்சான்றைப் பெற்ற முதலாவது தேங்காய் பால் பவுடர் தயாரிப்பு எனும் பெருமையையும் ரேணுகா கொண்டுள்ளது. இந்த SLS தரச்சான்று வழங்கும் நிகழ்வு அண்மையில் நாரஹேன்பிடவில் அமைந்துள்ள இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் பிஎல்சியின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ரேணுகா தேங்காய் பால் பவுடர் என்பது அதன் உயர்ந்த தரம் மற்றும் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கின்றமை காரணமாக அதிகளவு பிரபல்யம் பெற்ற தயாரிப்பாக காணப்படுகிறது. 

இலங்கையின் நுகர்வோர்கள் மத்தியில் SLS இலச்சினை என்பது மிகவும் பிரபல்யமடைந்துள்ளது, இதன் மூலமாக இந்த SLS இலச்சினையைக் கொண்ட தயாரிப்புகள் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்படுகின்றன. 'சௌகர்யமான பொருட்கள்' என்பதில் காணப்படும் பதப்படுத்திகள், செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் போன்றன மனித சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கின்றமை குறித்து அண்மைக்காலங்களில் பலரின் பெரும் கவனத்தை ஈர்த்த விடயங்களாக அமைந்திருந்த நிலையில், ரேணுகா தேங்காய் பால் பவுடரில் இவ்வாறான எவ்வித சேர்மானங்களும் இல்லை என்பதை நிறுவனம் உறுதி செய்வதுடன், இது 100% இலங்கை தயாரிப்பு என்பதையும் ளுடுளு தரச்சான்று உறுதி செய்துள்ளது. தொழிற்சாலையிலும், சந்தையிலும் உற்பத்தி செயற்பாடுகள், திடீர் பரிசோதனைகள் மற்றும் மாதிரி பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலமாக தரம் பின்பற்றப்படுகின்றமை உறுதி செய்யப்படுகின்றது. 

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. லலித் சேனவீர கருத்து தெரிவிக்கையில், 'ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் உற்பத்தி பகுதியில் பின்பற்றப்டும் பரிபூரண தர பரிசோதனை கட்டமைப்பு என்பது கடுமையான தர விதிமுறைகளுக்கமைய அமைந்துள்ளதுடன், SLS தரச்சான்றையும் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். சந்தையில் காணப்படும் SLS தரச்சான்றைப் பெற்ற ஒரே தேங்காய் பால் பவுடராக இது அமைந்துள்ளது. தரக்கட்டளைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், உலகளாவிய ரீதியில் காணப்படும் அனைத்து வாடிக்கையாளர்களையும் சென்றடையும் தயாரிப்பின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எம்வசம் உள்ளது. வழமையான ஆரோக்கியமான உணவை உட்கொள்வதற்கு அவர்களுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், இது போன்ற தர உறுதிப்படுத்தல்களை வழங்குவது எமது பொறுப்பாக அமைந்துள்ளது' என்றார்.

ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் பிஎல்சியின் சர்வதேச வர்த்தக நாம சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி தர்ஷிகா ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், 'SLS தரச்சான்றை பெற்றுள்ளமையானது எமது வர்த்தக நாமத்துக்கும், நிறுவனத்துக்கும் பெரும் கௌரவமாக அமைந்துள்ளது. இலங்கையின் சகல உற்பத்திகளின் தரத்தை உறுதி செய்யும் ஒழுங்குபடுத்தல் அமைப்பாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் திகழ்கிறது. ரேணுகா என்பது 100% இலங்கை நிறுவனமாகும், எமது உற்பத்திகள் அனைத்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் உயர் தரத்தில் அமைந்துள்ளன என்பதை நாம் உறுதி செய்கிறோம். அத்துடன் கடுமையான தூய்மை நிலைகளை பின்பற்றுவதுடன், தொடர்ச்சியானதும் உத்தரவாதத்துடன் கூடியதுமான தயாரிப்புகளை எமது சகல நுகர்வோருக்கும் வழங்குகிறோம்' என்றார்.

இன்றைய நுகர்வோர்கள் மத்தியில் சௌகர்யம் என்பது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |உடனடியாக தயாரிக்க தயார் நிலையிலுள்ள பொருட்கள்' மிகவும் பிரபல்யமடைந்து காணப்படுகின்றன. நுகர்வோரின் தொழில்புரியும் சூழ்நிலை, வீடுகளின் அளவு, சிறுவர்களின் பிரசன்னம் மற்றும் உணவு தயாரிப்புக்கு தேவைப்படும் ஈடுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவை அதிகளவு ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இந்த தேவைகளை கருத்தில் கொண்டு, 2005 ஆம் ஆண்டில் ரேணுகா பல்வேறு வகையான தேங்காய் உற்பத்திகளை அறிமுகம் செய்திருந்தது. இவை படிப்படியாக அதிகளவு நாடப்படும் உடனடியாக பயன்படுத்தக்கூடிய தேங்காய் பால் வர்த்தக நாமமாக உயர்ந்துள்ளன. 

SLS க்கு மேலதிகமாக, வத்துபிட்டிவெல ஏற்றுமதி பதப்படுத்தல் வலயத்தில் அமைந்துள்ள நவீன மூன்று கட்ட ஸ்பிரே மூலம் உலர வைக்கும் ரேணுகா தேங்காய் பால் மா உற்பத்தி தொழிற்சாலைக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ISO 22000- GMP தரச்சான்று, British Retail Consortium (BRC) மற்றும் London Bethdin Kosher தரச்சான்று ஆகியன கிடைத்துள்ளன. இவற்றின் மூலமாக உயர் தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆகியன உறுதி செய்யப்படுகின்றன. தேங்காய் மூலமான உணவு மற்றும் பான வகைகள் உற்பத்திலியில் ஈடுபட்டுள்ள உயர்ந்த நாமம் எனும் வகையில் ரேணுகா தயாரிப்புகள் உலகின் 27 நாடுகளில் கிடைப்பதுடன், புதிய நாடுகளுக்கு சென்றடைவதற்கான திட்டத்தையும் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X