2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ரயினோ வீட்டு திட்டம் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மாபெரும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு 20 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் செயற்றிட்டத்தை ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிட்டட் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்தச் செயற்றிட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் அரநாயக்கவில் நடைபெற்றது.  

 இந்த வைபவத்தில்,வலு மற்றும் வலு மீள்பயன்பாட்டு அமைச்சர் கௌரவ. ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிட்டட் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  
 

அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான மண்சரிவால் இடம்பெயர்ந்திருந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை,ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயசீலன் ஞானம் முன்மொழிந்திருந்தார்கள் விஜயங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர், இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வரையிலான சகல செயற்பாடுகளையும் ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ லிமிட்டட் குழம சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் செயற்றிட்டத்தின் ஒழுங்கிணைப்பாளர் பிரியந்த ஜயசிங்கவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  
 

அரசாங்கத்தினால் வீடுகள் நிர்மாணத்துக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில், இந்தத் திட்டத்தின் பிரகாரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு 45 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் ஏற்றுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா 781 சதுர அடி அளவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள அளவுகோல்களின் பிரகாரம் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  
 

இந்தச் செயற்றிட்டம் தொடர்பில், பிரியந்த ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,'நாட்டில் ஏற்பட்டிருந்தக் கடுமையான இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மத்தியில் வழமையான நிலையை ஏற்படுத்துவது என்பது ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிட்டெட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டமாக அமைந்துள்ளது. 45 மில்லியன் ரூபாய் செலவில் 20 வீடுகளை நிர்மாணிப்பது என்பது எமது மற்றுமொரு சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த செயற்றிட்டமாக அமைந்துள்ளது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X