Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து உறுதி செய்யும் வகையில், CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின், இலங்கையின் முதல் தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரியினால், தொடர்ச்சியான 17 ஆவது வருடமாக, 36 ஆவது கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த போட்டித் தொடர், இலங்கை விமானப் படை விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்றதுடன், இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். 13 வயதுக்குட்பட்ட, 15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன், இலங்கையின் வளர்ந்து வரும் ஸ்கொஷ் திறமைசாலிகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா ஸ்கொஷ் தலைவர் எரந்த கீகனகே கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா ஸ்கொஷ்ஷை பொறுத்தமட்டில், இந்த சம்பியன்ஷிப் என்பது, எமது நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும். இதனூடாக, நாட்டின் எதிர்கால திறமைசாலிகள் வெளிக்கொணரப்படுகின்றனர். கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் உடன் பிரதான அனுசரணையாளராக 17 வருடங்களாக இணைந்துள்ளமைக்காக ரிட்ஸ்பரிக்கு நன்றி தெரிவிக்கிறோம். விளையாட்டை மேம்படுத்துவது மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவசியமான ஆதரவை வழங்குவதில் அவர்களின் நீண்ட கால ஆதரவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.” என்றார்.
CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுக்ஷா பெஸ்டியன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதில் ரிட்ஸ்பரியைச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக ஸ்கொஷ் எமது பிரதான அங்கமாக அமைந்துள்ளது. பெருமளவு ஈடுபாட்டுடன் இளம் மெய்வல்லுனர்கள் போட்டியிடுவதை காண்பதனூடாக, ஒவ்வொரு வருடமும் இந்தப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க எம்மை தூண்டுகின்றது.” என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago