2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பெண்கள் ஆரோக்கிய நிலையம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கையின் வெவ்​ேவறு கட்டங்களில் காணப்படும் பெண்களுக்கு எழும் சுகாதாரப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், பரந்தளவு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பெண்கள் ஆரோக்கிய நிலையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த சகல வசதிகளையும் படைத்த பெண்கள் ஆரோக்கிய நிலையத்தின் மூலமாக, பல முக்கியமான மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகள் போன்றன பூப்பெய்திய பெண்கள் முதல், மாதவிடாய் நின்ற பெண்கள் வரை சகலருக்கும் வெவ்​ேவறு  சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச

தரங்களுக்கமைய அமைந்துள்ளது.   
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பெண்கள் ஆரோக்கிய நிலையம் என்பது,        வெவ்​ேவறு  சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, பிரத்தியேகமான முறையில் துரித கதியில், வினைத்திறனான முறையில் மற்றும் சிக்கனமாக சிகிச்சகளைளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைக மேற்கொண்டுள்ளது.   

வழமையான பெண்கள் பராமரிப்பு, காம்பு பரிசோதனை, மார்பு பரிசோதனை, பூப்பெய்துவதற்கு முன்னர் மற்றும் மாவிடாய் தொடர்பான பிரச்சினைகள், மாதவிடாய் குறைபாடுகள், மார்பகம் தொடர்பான பிரச்சினைகள், பிரசவத்துக்கு முன்னர் மற்றும் குழந்தைப் பேறு மற்றும் குழந்தைப்பேறின் பின்னரான பராமரிப்புகள், பெண்நோயியல் பிரச்சினைகள், உடலுறவு தொடர்பான பிரச்சினைகள், குடும்ப திட்டமிடல், பாலூட்டல் பிரச்சினைகள், பெண்களின் உளவியல் பராமரிப்பு, மாதவிடாய் நிறுத்தத்துக்கு முன்னர், பின்னரான பராமரிப்பு, பெண்களின் சிறுநீர் வெளியேறல் தொடர்பான பிரச்சினைகள், உடலுறவு செயற்பாடுகள் குறைபாடுகள், பெண்நோயியல் அழகியல் சத்திரசிகிச்சை, திருமணத்துக்கு முன்னரான ஆலோசனைகள், சுகாதார கற்கைகள், பெற்றோருக்கான அறிவுறுத்தல்கள் போன்ற சேவைகள் இந்த உலகத்தரம் வாய்ந்த நிலையத்தில் வழங்கப்படுகிறது.   

லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் அமைந்துள்ள பெண்கள் ஆரோக்கிய நிலையம் என்பது, நவீனf டிஜிட்டல் மம்மோகிராம் சாதனங்களை கொண்டுள்ளதால், ஆகக்குறைந்த அசௌகர்யம் மற்றும் ஆகக்குறைந்த கதிரியக்கம் போன்றவற்றுடன் செயற்படுகின்றது மற்றும் Fujifilm, Amulet Innovality மூலமாக மார்பு புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இனங்காண்பதுக்கு உயர் உணர்திறனை கொண்டிருப்பதுடன், மார்பக பயோப்சிஸ் மற்றும் ஏனைய சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கான ஆற்றலையும் கொண்டுள்ளது.   

'இலங்கையின் புற்றுநோய் தரவுகளை பார்க்கும் போது, மார்பு புற்றுநோய் என்பது பொதுவான பிரச்சினையாக அமைந்துள்ளதுடன், இது அதிகரித்த வண்ணமுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மட்டுமன்றி, மார்பக புற்றுநோய் என்பது அபிவிருத்தியடைந்த நாடுகளில் பொதுவான புற்றுநோயாக அமைந்துள்ள போதும், அது உயிராபத்தை ஏற்படுத்தும் நோயாக கருதப்படவில்லை. ஆரம்ப நிலையில் இனங்காணலை மேற்கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்வதால், சிகிச்சைகளின் பின்னர் பலர் தற்போதும் உயிருடன் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X