2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

லண்டன் பட்டப்படிப்புகளை இலங்கைக்கு கொண்டுவரும் ESOFT Metro Campus

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டப்படிப்பு கற்கைகளை தொடர விரும்புகின்ற மாணவர்கள் தற்போது மூன்று வருடகால பிரித்தானிய பட்டப்படிப்பு ஒன்றை அந்நாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்தியங்கும் இலங்கை நிறுவனமான ESOFT Metro Campus ஊடாக பெற்றுக் கொள்ளலாம். ஐக்கிய இராச்சியம், London Metropolitan பல்கலைக்கழகத்தின் ஒரு பிரத்தியேக மூலோபாய பங்காளரான ESOFT Metro Campus ஆனது சிக்கனமான விதத்தில் உலகத்தரம் வாய்ந்த பட்டப்படிப்பை தொடர்வதற்கான ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகின்றது. இதன்படி ஐக்கிய இராச்சியத்தின் London Metropolitan பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்ற கணினிசார் துறையில் BSc (Hons), மென்பொருள் பொறியியலில் BEng (Hons) மற்றும் வியாபார நிர்வாகத்தில் BA (Hons) போன்ற பட்டப்படிப்பு கற்கைளை ESOFT Metro Campus வழங்குகின்றறது.

லண்டனில் உள்ள மிகப் பெரிய தனியொரு பல்கலைக்கழகமாக திகழும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் London Metropolitan பல்கலைக்கழகமானது இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு பல பிரிவிலான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு தகைமைகள் பலவற்றை வழங்கும் பொருட்டு 2013ஆம் ஆண்டு தொடக்கம் ESOFT Metro Campus உடன் பங்காளியாக இணைந்து கொண்டது. இந்த பட்டப்படிப்புகள் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, மாணவர்களின் பெறுபேறுகளை முழுமையாக இடமாற்றல் செய்துகொள்ளும் (Full credit transfer) வசதியும் தாய் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது. பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான இலங்கையைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் குழுவானது ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டியங்கும் பல்கலைக்கழகத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன், உலகெங்கும் மிகச் சிறந்த பெறுபேறுகளை உருவாக்குவதில் நீண்டகால வரலாற்றுப் பதிவை இவ் விரிவுரையாளர்கள் தம்மகத்தே கொண்டிருக்கின்றார்கள்.

ESOFT Metro Campus தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான Dr. Dayan Rajapakse கூறுகையில், 'மாணவர்களுக்கு நிதிசார் நெகிழ்ச்சித்தன்மை வசதி வழங்கப்பட்டிருக்கின்ற அதேநேரம் கடன்கள் மற்றும் HSBC அட்டை வெகுமதிகள் உள்ளிட்ட விஷேட கொடுப்பனவு திட்டங்களையும் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். உயர்தரத்தில் அதிசிறந்த பெறுபேறுகள் மற்றும் மிகச் சிறந்த கல்விசார் தொழிற்பாடுகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான 'Merit' அடிப்படையிலான புலமைப் பரிசில்களும் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. சிக்கமான அடிப்படையில், உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் தரமான வசதிகளை வழங்குகின்ற அதேவேளை, மாணவர்கள் வேலைக்கு தயார் நிலைப்படுத்தப்படுவதுடன் அவர்களுடைய கல்வி அறிவானது செயன்முறை சார்ந்த செயலாற்றலாகவும் திறன்களாகவும் மாற்றியமைக்கப்படுகின்றது. பூரணத்துவமான கல்வியில் கூடிய கவனம் செலுத்தும் ESOFT Metro Campus, மாணவர்கள் தம்முடைய இறுதி வருட காலப்பகுதியில் வேலை அனுபவத்தை பெற்றுக் கொள்ள உதவுவதுடன் அவர்கள் வேலை-கற்றல் இரண்டுக்குமிடையே ஆரோக்கியான ஒரு சமநிலையை பேணும் விதத்தில் வகுப்புக்களை வார இறுதி நாட்களுக்கு மாற்றியமைக்கக் கூடிய நெகிழ்ச்சித் தன்மைக்கும் இடமளிக்கின்றது' என்றார். 

ESOFT Metro Campus ஆனது கல்வி துறையில் 15 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ள அதேநேரம் இலங்கையில் உள்ள மிகப் பெரிய தனியார் துறை கல்வி வலைப்பின்னலாக திகழ்கின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வியாபார முகாமைத்துவம், ஆங்கில மொழி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம், பொறியியல் போன்ற பாடநெறிகளை இது வழங்கி வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள மூலோபாய அமைவிடங்களில் அமைந்திருக்கும் 45 வளாகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குவதுடன் ஒவ்வொரு வருடமும் 30,000 மாணவர்களை இணைத்துக் கொள்கின்ற ESOFT Metro Campus, ஒரு முறைசார்ந்த கல்வித் தளமேடையின் ஊடாக புகழ்பெற்ற மற்றும் அங்கீகாரமுடைய தகைமைகளையும் மிகவுன்னதமான கல்வியையும் வழங்கும் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது. 

அனைத்து முக்கிய கிளைகளிலும் அமைக்கப்பட்டுள்ள ESOFT Metro Campus விரிவுரை அறைகள் மற்றும் விஷேட தொழிற்பாட்டு அறைகள் ஆகியவை பல்கலைக்கழக நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் கற்பித்தலுக்கு அவசியமான Multimedia உபகரணமும் இவ் அறைகளில் பொருத்தப்பட்டுள்ளது. மிக முன்னேற்றகரமான உபகரண வசதியைக் கொண்ட கணணி ஆய்வுகூடங்கள், நூலகங்கள், வள மையங்கள் மற்றும் மாணவர் செயற்பாட்டு தளப் பகுதிகள் போன்றவை ESOFT Metro Campus வளாகங்களில் காணப்படும் முக்கியமான சில சிறப்பம்சங்கள் ஆகும். 

மாணவர்களுக்கு அனுமதி தொடக்கம் பட்டமளிப்பு வரைக்கும் ESOFT Metro Campus உதவியளிக்கின்றது. அதேநேரத்தில், அனைத்து விதமான கல்விசார் நிகழ்ச்சித் திட்டங்களிலும் தரமான அறிவுறுத்தல்களையும் மிகச் சிறப்பான வசதி வாய்ப்புக்களையும் வழங்குகின்றது. தொழில்சார் தகைமைகளையும் அதேபோல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களையும் வழங்கி வருகின்ற ESOFT Metro Campus, தரம் தொடர்பில் கொண்டுள்ள அனுபவம் அர்ப்பணிப்புக்கு - கடந்த பல வருடங்களாக அக் கல்வியகம் ஏற்படுத்திக் கொண்ட பங்காளித்துவங்கள் அத்தாட்சியாக அமைந்தன. ESOFT Metro Campus ஆனது தகவல் தொழில்நுட்பத்திற்கான பட்டய நிறுவகமான BCS இன் ஒரு Gold Partner மற்றும் அங்கீகாரம் பெற்ற கற்கைநெறி வழங்குனராகவும், BIT இற்கான மிகப் பெரிய கற்கைநெறி வழங்குனராகவும் ஐக்கிய இராச்சியத்தின் Pearson Edexcel நிறுவகத்தின் ஒரு Gold Partner ஆகவும் பங்காளித்துவங்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, BCS HEQ துறையில் உலகின் மிகப் பெரிய கற்கைநெறி வழங்குனராக திகழ்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X