2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வீதி ஒழுங்குகள் தொடர்பில் 'டேவிட் பீரிஸ்' விசேட நடவடிக்கை

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக, வாகனப் பரிசோதனையும் விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் வடபிராந்திய முகாமையாளர் கோசல ரத்நாயக்க தெரிவித்தார்.

நிறுவனத்தின் யாழ். அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், வீதி ஒழுங்குகளைச் சரியான முறையில் பின்பற்றாமை மற்றும் வாகனங்களை சரியான முறையில் பேணாமை ஆகிய காரணங்களால் யாழ்ப்பாணத்தில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதி யாழ். முற்றவெளியில் பகுதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வாகனப் பரிசோதனையும், வீதி ஒழுங்குமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் நடத்தப்படவுள்ளன.

வீதி ஒழுங்கு விழிப்புணர்வை மோட்டார் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பரிசோதகர் கெ.மதிவதனன் செய்யவுள்ளார். வாகனப் பரிசோதனைகளை எமது நிறுவனத்தின் தமிழ் பொறியியலாளர் ஒருவர் மேற்கொள்ளவுள்ளார். யாழ். மாவட்டத்தில் 4,500 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள.

24ஆம் திகதி, பழைய பூங்காவில் முச்சக்கரவண்டி குடும்பங்களுக்கான செயற்றிட்டங்கள் செய்யப்படவுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கள் அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு என்பன ஏற்படுத்தப்படவுள்ளன. இதனைவிட, பெண் முச்சக்கரவண்டி சாரதிகளைக் கௌரவிக்கவுள்ளோம். 

அத்துடன், பெண் முச்சக்கரவண்டி சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள நிதியுதவியும் செய்யவுள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X