2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

விருதுகளை வழங்கிய கொமர்ஷல் வங்கியின் 'அருனலு'

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியின் பாராட்டை கல்வித் துறையில் சாதனை படைத்த மூன்று சிறந்த மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அண்மையில் 375000 ரூபா பணப்பரிசாக வழங்கப்பட்டது.

அருனலு திட்டத்தின் கீழ் இந்தப் பணப் பரிசில்கள் 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்டது. அருனலு கொமர்ஷல் வங்கியின் சிறுவர்களுக்கான விசேட சேமிப்புத் திட்டமாகும். அவர்களின் கல்விச் செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கணக்குத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மூன்று மாணவர்களுள் இருவர் தங்களது திறமைக்காக தலா 100000 ரூபா வீதம் பெற்றுக் கொண்டனர். மூன்றாவது மாணவர் அருனலு கணக்கு வைத்திருப்பவர் என்ற வகையில் 175000 ரூபாவை பெற்றுக் கொண்டார். வங்கியின் குறிப்பிட்ட பரிசுத்திட்டத்தின்படி இதுவே ஆகக்கூடிய தொகையாகும். 

இந்த வருடாந்த அருனலு வெகுமதி திட்டத்தின் கீழ் பரிசு பெற தகுதியான ஏனைய அனைவருக்கும் உரிய கிளைகளுடாக விரைவில் பரிசுகள் வழங்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.

பாடசாலை செல்லும் வயது பராயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக 1991ம் ஆண்டு கொமர்ஷல் வங்கி உருவாக்கிய விசேட சேமிப்புக் கணக்குத் திட்டமே அருனலு ஆகும். இந்தப் பரிசுத்திட்டம் 1998ல் தொடங்கப்பட்டது. இதுவே தற்போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலிற்காக நாட்டில் வழங்கப்படும் மிகப் பெரிய பரிசுத் தொகையாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்தப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு அவர்களின் தொடர்ச்சியான கல்வி ஆதரவுக்காக இது வழங்கப்படுகின்றது. 

2013ம் ஆண்டில் நாடு தழுவிய மட்டத்தில் இந்தப் பரீட்சையில் தத்தமது பாடசாலைகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்ட 575 மாணவர்களுக்கு 4 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இது தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்ட 9 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமானதாகும். அதேபோல் 2014ம் ஆண்டில் இதே திட்டத்தின் கீழ் 563 மாணவர்களுக்கு 5.3 மில்லியன் ரூபாவை வங்கி பகிர்ந்தளித்துள்ளது. 

இந்தக் கணக்கிற்கு வருடாந்த வட்டியாக 6.5வீதம் வழங்கப்படுகின்றது. இலங்கையில் உள்ள மிகச்சிறந்த சிறுவர் சேமிப்புக் கணக்காக இது கருதப்படுகின்றது. தேசிய மட்டத்தில் ஒளிரும் மாணவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுவதோடு கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடசாலை மட்டத்திலும் அவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மிகச் சிறந்த வெற்றியை ஈட்டுகின்ற போது வருடாந்தம் வெதயிமிக்க பணப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல் அருனலு கணக்கு வைத்திருப்பவர்கள் மாவட்ட மட்டத்தில் வெற்றியீட்டுகின்ற போது அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்படுகின்றது.

18 வயதிற்கு கீழ்ப்பட்ட எந்தவொரு சிறுவரும் நாடு முழுவதும் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைகளில் அருனலு சேமிப்புக் கணக்குகளை தொடரலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X