2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விலங்கு நல்வாழ்வு சட்டமூலத்துக்குஅமைச்சரவை அங்கிகாரம்

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலங்கு நல்வாழ்வு வரைபுச் சட்டமூலம் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளதை Otara Foundation வரவேற்றுள்ளதுடன், சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கும் மேற்படி நடவடிக்கை சட்டமாக்கப்படுவதற்கு முழு ஆதரவை அமைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. வரைபு அங்கிகரிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதி, பிரதமர், கிராமிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகியோருக்கு அவர்கள் சட்டமூலத்தை ஆதரிப்பதில் வெளிப்படுத்திய அரசியல் விருப்புக்காகவும் மற்றும் விலங்கு நலவாழ்வு சட்டமூலத்தை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்கு தமது ஒத்துழைப்பையும் கவனிப்பையும் வழங்கிய அரச அதிகாரிகளுக்கும் நிறுவனம் நன்றியை தெரிவித்துள்ளது. சட்டமூலம் நிறைவேற்றப்படுவதிலும் விரைந்து நடைமுறைப்படுத்தப்படுவதிலும் இவர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மேற்படி சட்டமூலத்தை தயாரித்து 2006இல் அரசாங்கத்திடம் பதிந்துரைகளை செய்திருந்த இலங்கை சட்ட ஆணைக்குழுவுக்கும் நிறுவனம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இம்மாற்றத்துக்கான முன்னெடுப்பை ஒரு தனிநபர் சட்டமூலமாக 2010இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த வண. அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட தமது நிலைத்து ஆதரவை வழங்கியவர்களுக்கும் நிறுவனம் தனது நன்றியறிதலை சமர்ப்பிக்கின்றது. அத்துடன் 1012 தொடக்கம் இச்சட்டமூலத்துக்கென இடைவிடாது ஆதரவு தேடிய விலங்குநல சட்ட ஆவண மனுதாரர்களுக்கும் அதேவேளை சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்காக விண்ணப்பங்களில் ஒப்பமிட்ட 28,000 பேருக்கும் Otara அமைப்பு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

சட்டவாக்க வரைபு நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் வரையில் நீண்டசெயன்முறைகள் காத்திருக்கின்றன. மேற்படி சட்ட மூலத்தின் முன்னேற்றத்தில் பங்குகொண்டு எமது முயற்சிகளில் பங்காளிகளாக செயற்பட்டு நிற்க முன்வருமாறு கருணையுணர்வு மிக்க குடிமக்களை நாம் கோருகிறோம்' என்று நிறுவனம் ஒரு அறிக்கை மூலம் கோரியுள்ளது. கடந்து செல்லவேண்டிய பல்வேறு முக்கிய கட்டங்களில் சட்டமூலம் முதலாவது கட்டத்தை வெற்றிகரமாக தாண்டியுள்ளது.

அமுலாக்கம் வரையில் மேலும் நீண்ட தூரம்  செல்லவேண்டியுள்ளது.

2015 ஒக்டோபர் 04ஆம் திகதியன்று ஒட்டாரா பவுன்டேஷன் விலங்கு நல்வாழ்வு சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் அவசியத்தை வலியுறுத்தி உலக விலங்கு தினத்தை குறிக்கும் முகமான ஒரு கையெழுத்து பிரசார நடவடிக்கை ஒன்றை தொடங்யிருந்தது. 90சதவீதமான கையொப்பங்கள் இலங்கையரிடமிருந்து பெறப்பட்ட அதேவேளை கடல் கடந்த நாடுகளிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.

கையொப்பங்கள் இலங்கையின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கொழும்பு, மற்றும் பதியத்தலாவ, அம்பாறை போன்ற தொலைதூர இடங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X