Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வன்முறை ஆபத்துடைய சிறுவர்களுக்கு உதவும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் யுனிசெப் நிறுவனத்தினூடாக ஒரு முன்மாதிரிச் சேவையை ஆரம்பித்துள்ளது. ஏதேனுமொரு வன்முறைச் சம்பவம் பொலிஸ் நிலையத்தில், அவசர அழைப்பு எண்ணில் அல்லது வேறு ஏதேனும் ஒரு முறை மூலம் முறைப்பாடு செய்யப்பட்டதிலிருந்து, சிறுவர்களை நிலையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளுடன் சம்பந்தப்படுத்தும் வரையில், அவர்களுக்கு தேவையான சேவைகளை விரைவாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் வழங்குவதே இந்த புதிய மாதிரியின் நோக்கமாகும்.
கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாதிரிச் சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையில் கிராம மற்றும் தேசிய மட்டங்களில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஆறு முதன்மை முன்னெடுப்புக்களை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில், 1929 உதவி அழைப்பு சேவையை மேம்படுத்துதல், வழக்கு முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்துதல், சிறுவர்களுக்கான ஆதரச் சேவைகளை முன்னேற்றுதல், நீதிச் செயன்முறைகளின் வினைத்திறனை மேம்படுத்துதல், சிறுவர்களிடமிருந்து சான்றுகளை பெற்றுக்கொள்ளும் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு சாட்சி அறைகளுடன் சிறுவர் நேய நீதிமன்றங்களை அறிமுகப்படுத்துதல் என பல முன்னேற்றகரமான முன்னெடுப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சங்களாகும். வன்முறையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாதிரிச் சேவையின் தொழிற்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் நீதித்துறைக்கான அனுசரனைத் திட்டத்தினூடாக அனுசரணை வழங்குகின்றது.மேலும், ஒரு நாடு என்ற வகையில் நாம் தேசிய மற்றும் சர்வதே கொள்கைகளுடன் எந்தளவு இணங்கியொழுகிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கு இந்த மாதிரிச் சேவையின் ஆரம்பம் இன்றியமையாத முதன்மை படிமுறையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவை மேம்படுத்தல் பணி இலங்கை தேசிய கொள்கை சட்டகத்தில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாதிரிச் சேவையின் அறிமுகமானது 2024 ஆம் ஆண்டில் இலங்கை அங்கீகரித்த சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பொக்டா மாநாட்டின் முக்கிய அர்ப்பணிப்புக்களின் ஒரு பகுதியாகும்.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவை வழங்கல் தொடர்பான இந்த அணுகுமுறையின் பயனாக சிறுவர்களின் விடயங்களில் கவனம் செலுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறுவர் உரிமைகள், அவர்களின் கண்ணியம் மற்றும் நலன்புரி சேவைகளை பாதுகாத்து முன்னுரிமைப்படுத்தும் விதத்திலும், தரமான சேவைகளை விரைவாக வழங்குவதற்கும் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாதிரிச் சேவைகள் டிஜிட்டல் புத்தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்களுக்கு சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற சிறந்த செயன்முறைகள் துணையாக இருப்பதோடு, அவை இலங்கை சிறுவர்கள் வினைத்திறன்மிக்க, தரமான சேவைகள் தொடர்பாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
8 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
19 Sep 2025