2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வறுமைக்கோட்டின் கீழ் வசிப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலை மந்த கதியில் வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், 100 மில்லியனுக்கு குறைவானவர்கள் மட்டுமே உலகளாவிய ரீதியில் வறுமைக்கோட்டின் கீழ் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.   

2013இல் 767 மில்லியன் மக்கள், நாளொன்றுக்கு 1.90 அமெரிக்க டொலர்களுக்கு குறைந்த வருவாயில் வாழ்ந்து வந்தனர். இதற்கு முன்னைய ஆண்டில் இத் தொகை 881 மில்லியனாகப் பதிவாகியிருந்ததாகவும், ஆசியா நாடுகளில் உறுதியான வருமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.   

“சர்வதேச பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்நோக்கியிருந்த போதிலும், வறுமையை குறைக்கும் வகையில் நாடுகள் செயலாற்றி சுபீட்சத்தை ஏற்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது” என உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் தெரிவித்தார்.   

1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013இல் உலகில் 1.1 பில்லியன் குறைந்தளவு வறுமைக்கோட்டின் கீழ் வசிப்போர் காணப்பட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.   

2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் மோசமான வறுமை நிலையை இல்லாமல் செய்வது எனும் ஐக்கிய நாடுகளின் இலக்கை எய்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X