Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2025 ஜூலை 15 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மேற்கு ரோட்டரி கழகத்தினால் ‘குழந்தைகளின் வாழ்வை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ச்சியாக இதய கோளாறு கொண்ட சிறுவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சைகளுக்கான உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
‘congenital heart defect’ (CHD) எனப்படும் பிறவியிலேயே இதய கோளாறு கொண்ட சிறுவர்களுக்காக 2018ஆம் ஆண்டு கொழும்பு மேற்கு ரோட்டரி கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இலவச சத்திர சிகிச்சை திட்டத்தின் ஊடாக இதுவரை 140 சிறுவர்கள் பயனடைந்துள்ளனர்.
இலங்கையில் மேற்கொள்ள இயலாத மேற்படி சத்திர சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களை தொடர்பு கொண்டு அவர்களை இந்தியாவின் பிரபல வைத்தியசாலைக்கு அனுப்பி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற சேவ்
எ கிட்ஸ் லைஃப் கொண்டாட்டத்தில் சேவ் எ கிட்ஸ் லைஃப் திட்டத்தின் முன்னாள் குழந்தை பயனாளி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ரோட்டரி அதிகாரிகள்.
தெரிவு செய்யப்படும் சிறுவர்களை அவர்களது பெற்றோருடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் விமான டிக்கெட்டுக்கள்,வைத்தியசாலை செலவு,உணவு உள்ளிட்ட சகல செலவுகளையும் ரோட்டரி மேற்கு கழகம் பொறுப்பேற்றுக்கொள்கிறது. ஒரு பிள்ளைக்காக 3000 அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இதுபோன்ற பிறவியிலேயே இதய கோளாறு கொண்ட சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் மேற்படி கழகத்தின் 0760952640 அல்லது saveakidslifesl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம்
இலங்கை, மாலைத்தீவு நாடுகளின் பட்டியலில் கொழும்பு மேற்கு ரோட்டரி கழகமானது ரோட்டரி மாவட்டம் 3220இன் மிகப்பெரிய கழகமாகவுள்ளது. 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கழகமானது சமூக அபிவிருத்தி முதல் பல்வேறு திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்துள்ளது. இந்த கழகத்தின் கீழ் 5 இன்ரக்ட் கழகங்களும் 5 ரோட்டரக்ட் கழகங்களும் செயற்படுகின்றன.
குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்குமான உதவிகளை இந்த கழகம் பெற்றுக்கொடுக்கிறது. குறிப்பாக சுகாதார ரீதியிலான உதவிகளின் பட்டியலில் வைத்தியசாலைகளுக்கான வைத்திய உபகரணங்கள், தொழில்நுட்ப கற்கைகளுக்கான உதவிகள், மாணவர்களுக்கான ஆங்கில மொழி கற்கைகள், தலைமைத்துவ பயிற்சிகள் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரோட்டரி கழகத்தின் முன்னாள் ஆளுநர் செபஸ்டியன் கருணாகரன் தெரிவிக்கையில், எமது ரோட்டரி கழகத்தினால் ‘குழந்தைகளின் வாழ்வை பாதுகாப்போம்’என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை வேலைத்திட்டத்தில் எம்மோடு கைகோர்த்துள்ள சுகாதார அமைச்சு, கொழும்பு சீமாட்டி வைத்தியசாலை, இந்திய உயர்ஸ்தானிகராலயம், ரோட்டரி நிதியம் மற்றும் ஏனைய நிதி அனுசரணையாளர்கள் உள்ளிட்ட இலங்கை, இந்திய ரோட்டரி கழங்கங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேவேளை எமது வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு நல்கும் இந்தியாவின் கொச்சில் பகுதியில் அமைந்துள்ள ‘அம்ரிதா’ தனியார் வைத்தியசாலையின் சேவைகள் மகத்தானவை.
இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற சேவ் எ கிட்ஸ் லைஃப் கொண்டாட்டத்தில் ரோட்டரி அதிகாரிகள் — உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சில குழந்தைகளுடன்.
இந்தியாவிலுள்ள ‘அம்ரிதா’ தனியார் வைத்தியசாலையானது ஆசியாவின் மிகப்பெரிய சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தியாவில் சிறந்த சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகளின் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.
மேற்படி வைத்தியசாலையானது இலங்கையிலிருந்து எம்மூடாக அனுப்பி வைக்கப்படும், தெரிவு செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர்களுக்கான இருதய சத்திரி சிகிச்சை தொடர்பான இலவச பயிற்சிகளையும் வழங்கி வருகிறது என்றார்.
கொழும்பு மேற்கு ரோட்டரி கழகத்தின் தலைவர் கே.பி.நாகராஜ் தெரிவிக்கையில், எம்முடைய இந்த வேலைத்திட்டத்துக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளோம். சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எம்முடனான நட்புறவின் அடிப்படையில் இலவசமாக விசாக்களை வழங்கி வருகிறது. இந்த உதவியானது சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025