2025 மே 17, சனிக்கிழமை

வாடிக்கையாளர்களுடன் Kaprukaஇன் வெசாக் கொண்டாட்டம்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி இணையத்தள வர்த்தக சேவையாளரான கப்றுக்க கொவிட்-19 வைரஸ் காரணமாக வீட்டில் தங்கியிருந்த தமது வாடிக்கையாளர்களுடன் இணைந்து பௌத்தர்களின் பிரதான பௌணமி தினமான அற்புதமான வெசாக் உற்சவத்தை வியக்கவைக்கும் விதத்தில் வேலைத்திட்டமொன்றை அண்மையில் முன்வைத்தது.

கப்றுக்கவால் பொருள்களை ஓடர் செய்கையில் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருள்களுடன் இரண்டு வெசாக் தோரன அலங்கார விளக்குகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக பெற்றுக் கொடுத்ததுடன் வெசாக் தினத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் தோரன விளக்குகள் இரண்டில் ஒன்றை கப்றுக்க குழுவினால் சேகரிக்கப்பட்டது.

சுகாதார காரணம் கருதி இம்முறை அனைத்து மத அனுஷ்டானங்களும் வீட்டு எல்லைக்குட்பட்டதனால் வாடிக்கையாளர்களுக்காக அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் தோரன விளங்குகள் அனைத்தும் கங்காராமை விகாரையில் காட்சிப்படுத்துவதற்கு கப்றுக்க நடவடிக்கை எடுத்தது.

இந்த அனைத்து வெசாக் தோரன விளக்குகளிலும் கொவிட் தொற்றுநோயிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு தேவையான ஆசிகள் அடங்கிய சொற்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. சுகாதாரப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு முறையையும் பின்பற்றி வெசாக் தோரன விளக்குகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்குதல், அந்த வெசாக் தோரன விளக்குகளை சேகரித்தது மட்டுமல்லாமல் அவை கங்காராமை விகாரையில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு ஜாதி மத பேதமின்றி வாடிக்கையாளர்கள் பலர் பங்குபற்றியதுடன் கொவிட் தொற்று கூடிய விரைவில் இல்லாதொழிய வேண்டுமென்பதே அனைவரின் வேண்டுதலாகும்.

கொவிட்-19 தொற்று நோயால் இலங்கை பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து கப்றுக்க குழுவினர் பல்வேறு விதங்களில் தமது ஒத்துழைப்பை தமது வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக் கொடுத்ததுடன் பௌத்த மக்களின் முக்கியமான சமய உற்சவத்தை வரம்புகளுக்கு மத்தியில் மேற்கொள்வதற்காக இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தமது வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தமை உண்மையிலேயே புகழத்தக்க விடயமாகும்.

கடந்த இரு தசாப்தகாலமாக இணைத்தளம் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கப்றுக்க நிறுவனம் இணையத்தள வர்த்தக நடவடிக்கைகளின் முன்னோடி நிறுவனமாகும். தற்போது 300க்கும் அதிகமான பிராண்டுகளைக் கொண்ட 125,000க்கும் அதிகமான பொருட்களை கப்றுக்கவிடமிருந்து விலை கொடுத்து வாங்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .