Editorial / 2020 மே 12 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
LMD-நீல்சன் வியாபார நம்பிக்கைச் சுட்டெண் (BCI) ஏப்ரல் மாதத்திலும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து 93 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 52 புள்ளிகள் சரிவடைந்திருந்தது.
எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து, 2019 மே மாதத்தில் பதிவாகியிருந்த 62 புள்ளிகள் எனும் ஆகக்குறைந்த பெறுமதியை விட 2020 ஏப்ரல் மாத பெறுமதி உயர்ந்த நிலையில் காணப்பட்டதாக LMD குறிப்பிட்டுள்ளது. நீல்சனின் நுகர்வோர் உள்ளக தகவல்கள் பணிப்பாளர் தெறிகா மியன்தெனிய குறிப்பிடுகையில், ”தற்போது COVID-19 தொற்றுப் பரவல் பற்றி பரவலாக பேசப்படுகின்றது. இந்நிலையில் இந்த தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுமா அல்லது அரசாங்கத்தினாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படும் கட்டுப்படுத்தல் நடவடிக்கையினால் இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்பது தொடர்பில் அறிந்து கொள்ள மக்கள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். இதுவரையில், இலங்கையில் ஆரம்ப நிலையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, பிராந்தியத்திலும், உலகளாவிய நாடுகளுடனும் ஒப்பிடுகையில் தொற்றுப் பரவல் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.” என்றார்.
கூட்டாண்மை வியாபாரங்களை பொறுத்தமட்டில் கொரோனாவைரஸ் பரவல் மற்றும் ரூபாயின் மதிப்பிறக்கம் போன்றன பெரும் பிரச்சனைகளாக அமைந்துள்ளன. பொருளாதாரம், அரசியல் கலாசாரம் மற்றும் COVID-19 ஆகியன தேசிய மட்டத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ளன என LMD தெரிவித்துள்ளது.
இந்த சுட்டெண்ணின் தோற்றநிலை தொடர்பில் LMD இன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், ”தற்போது இது மிகவும் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது. ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த வாரம் முதல் வியாபாரங்கள் பகுதியளவில் மீள இயங்க ஆரம்பிக்கின்றன. இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் ஒன்பது பதிலளிப்போர், தற்போதைய நோய்த் தொற்று காரணமாக தமது வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.” என்றார்.
மேலும், COVID-19 தொற்றிலிருந்து தமது வியாபாரங்கள் மீள்வதற்கு சுமார் ஆறு முதல் 12 மாதங்கள் வரை செல்லக்கூடும் என இந்த ஆய்வில் பதிலளித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago