Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் பங்களிப்பு வழங்கும் பிரதான துறையில் ஒன்றாக விவசாயத்துறை அமைந்துள்ளது, கிராமிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலைக்கு முக்கியமானதாக இது உள்ளது.
எவ்வாறாயினும், சேவைகள் துறை மற்றும் விவசாயத்துறை உறுதியான அபிவிருத்தியைப் பதிவு செய்திருந்த போதிலும், விவசாயத்துறை சார் பொருளாதாரம் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதுடன், இதனூடான வருமானம் வீழ்ச்சியடைந்த வண்ணமுள்ளது. விவசாயத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக, கொள்கை வடிவமைப்பாளர்களிடமிருந்து துரித கவனத்தை ஈர்த்துள்ளது. துறையின் வளர்ச்சி, நவீன மயமாக்கலுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல், கிராமிய வருமானத்தை அதிகரித்தல், ஏனைய துறைகளை நோக்கிச் சீரான மாற்றம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு, இந்தத் தீர்வுகள் அமைந்திருக்க வேண்டும்.
சிறியளவில் இயங்கும் விவசாயிகளுக்கு நிலைபேறான, உற்பத்தித்திறன் வாய்ந்த விவசாயச் செயன்முறைகளை நோக்கிப் பயணிப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் இலங்கையில் விவசாய செயற்பாடுகளை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி (TAMAP) திட்டத்தினூடாக, இலங்கை அரசாங்கத்துக்கு பரந்த விவசாய கொள்கை (OAP) மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான மூலோபாயம் தொடர்பான உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ஆலோசனை நிறுவனமான Ecorys Nederland B.V. முன்னெடுப்பதுடன், குறிப்பிட்ட இடையீடுகளினூடாக விவசாயத்துறையின் உற்பத்தித் திறன், செயற்றிறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றது.
TAMAP இன் அணித் தலைவரான கலாநிதி. கிறிஸ்டோஃவ் பட்ஸ்லன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் விவசாயத் துறையை முழுமையாக மீளக் கட்டமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது TAMAP இன் இலக்காக அமைந்துள்ளது. அதனூடாக, வினைதிறன் வாய்ந்த, உற்பத்தித்திறனான மற்றும் போட்டிகரமான விவசாயத்துறையை இலங்கையில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில வாரங்களில், பரந்த விவசாயக் கொள்கையுடன் தொடர்புடைய பங்காளர் ஆலோசனை செயன்முறையை நாம் வடிவமைப்பதுடன், விரைவில் அமைச்சரவையின் அங்கிகாரத்துக்குச் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
கொள்கை வடிவமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் சவாலாக, துறையை சார்ந்தவர்களுக்கு விவசாயத்துறையை சமூக மற்றும் பொருளாதார பெறுபேறுகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக மாற்றியமைப்பது அமைந்துள்ளது.
விவசாய பொருளாதார வல்லுநரான கலாநிதி. சதுர ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “பாரம்பரிய உற்பத்தியாளர்கள் என்பதிலிருந்து விவசாயத் தொழில் முயற்சியாளர்களாக, எமது விவசாயிகள் தரமுயர்த்தப்படுவது மிகவும் முக்கியமானதாகும். இதை மேற்கொள்ள பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, விவசாயத்துறையை நவீன மயப்படுத்த வேண்டியுள்ளது. விதைப்பதிலிருந்து, வாடிக்கையாளரைச் சென்றடையும் இறுதி உற்பத்தி வரையில், இந்த நவீன மயமாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது” என்றார்.
“பரந்த விவசாயக் கொள்கையுடன், இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 பிரேரிக்கப்பட்ட விடயங்களுக்கமைய முன்னெடுக்கும் மூலோபாயத்தை TAMAP தற்போது வடிவமைத்த வண்ணமுள்ளது. இது தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், ஒப்படைகள், பயிற்சிகள் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன. சகல பங்காளர்களின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு கலந்துரையாடல்கள், விவாதங்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன. விவசாய வியாபார மாதிரிகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் இடர்கள், சமூக நிலைப்பாடுகள் தொடர்பான பயிற்சிப்பட்டறைகளும் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பரந்த விவசாய கொள்கை, அதைச் செயற்படுத்தும் மூலோபாயம் ஆகியவற்றை மய்யப்படுத்தி TAMAP இனால் ஒப்படைகள் முன்னெடுப்பட்டுள்ளதுடன், அதைப் பூர்த்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது” என கலாநிதி பட்ஸ்லன் தெரிவித்தார்.
TAMAP இன் இலக்குகள் தொடர்பில் கலாநிதி ரொட்ரிகோ விவரிக்கையில், “விவசாயம் பங்களிப்புச் செய்யும் பல துறைகள் காணப்படுகின்றன. இவை தொடர்பில் வழிகாட்டல் அவசியமாகின்றது. இதன் காரணமாக மூலோபாயம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை இனங்காண்பதற்கு மூலோபாயம் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் காரணமாக நாம் விவசாய மூலோபாயம் பற்றிக் கவனம் செலுத்துகின்றோம்” என்றார்.
விவசாயத்துறையை நிலைபேறான துறையாக மாற்றியமைப்பதற்கு பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதை உறுதி செய்து, TAMAP அணி தற்போது சிவில் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களை வடிவமைத்த வண்ணமுள்ளது. அத்துடன், கொள்கை ஆராய்வு, திட்டமிடல், கண்காணிப்பு, மதிப்பீடு ஆகியவற்றில் அவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றது.
இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் இது முன்னெடுக்கப்படவுள்ளது.
TAMAP பெறுமதி சங்கிலித் தொடர் , சந்தைப்படுத்தல் நிபுணரான ஹான் வான் டெ மீரென்டொங்க் கருத்துத் தெரிவிக்கையில், “வணிக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு TAMAP இனால் எட்டு பெறுமதி சங்கிலித் தொடர் மீளாய்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், துறையின் எதிர்கால இடையீடுகளை ஆராய்வது, பரிந்துரைப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பழங்கள், மரக்கறிகள், மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பாற்பண்ணை, அத்தியாவசிய எண்ணெய்கள், பனம் பொருள், பூச்செய்கை போன்ற எட்டு தலைப்புகளில் அவற்றில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வாய்ப்புகளை வழங்கல், இந்தச் செய்கைகளுக்கு உதவுதல் போன்ற பெறுமதி தொடர் மீளாய்வுகளை நாம் மேற்கொண்டோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025