2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹேர்பல் எண்ணெயை சந்தையில் அறிமுகம் செய்யும் ReeBonn

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி ஹெர்பல் அழகுசாதன பொருட்களை  உற்பத்தி செய்து நாடெங்கிலும்  விநியோகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ReeBonn கொஸ்மெட்டிக்ஸ், தனது புதிய உயர் தர தயாரிப்பான  ஹெர்பல் எண்ணெயை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கண்ணித்தேங்காய் எண்ணெயிலிருந்து இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதுடன், கூந்தல் வளர்ச்சிக்கு நிரூபிக்கப்பட்ட ஒன்பது வகையான மூலிகைகள் மற்றும் விற்றமின் E ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ReeBonn பிரீமியம் ஹெர்பல் எண்ணெய் மூலமாக, கூந்தல் வளர்ச்சி உறுதி செய்யப்படுவதுடன், கூந்தலின் வேருக்கு வலுச்சேர்த்து கூந்தல் உதிர்வடைதலை தவிர்க்கும் வகையிலும்;. இளநரை ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையிலும்; தயாரிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் காணப்படும் பெருமளவான கூந்தல் எண்ணெய் வகைகள் கொப்பரா தேங்காய் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ReeBonn பிரீமியம் ஹெர்பல் எண்ணெய் ஆனது கன்னித்தேங்காய் எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால் அநாவசியமான கொழுப்பு அற்றது. எனவே, இதன் மூலம் கூந்தல் வேரில் எண்ணெய் படிந்திருப்பதை தடுத்து, காற்றோட்டம் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில். தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூந்தலுக்கு தொடர்ச்சியாக புத்துணர்வு கிடைக்கிறது.

ReeBonn பிரீமியம் ஹெர்பல் எண்ணெய் மேலும் பல சிறப்பு பயன்களை கொண்டுள்ளது தலைவலி மற்றும் ஞாபகமறதி ஏற்படுவதை தடுக்கிறது. கணனிகளில் பெருமளவு நேரம் வேலை செய்வோர் கண்களில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுவதால் கண் வலி  தலை வலி  போன்ற  பிரச்சனைகளுக்கு  உள்ளாகின்றனர். எமது உயர்தர ஹெர்பல் எண்ணெய் இப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

நீலாம்மரி- அடர்த்தியான பளபளப்பான கூந்தலை தருவதோடு, நீலாம்மரி மற்றும் மருதாணியின் கூட்டு கலவையானது கூந்தலின் இயற்கை கருமைத்தன்மையை  நீண்ட காலம் பேண உதவுகிறது
வல்லாரை- கேசத்தின் நுண் துவாரங்களுக்கு   தேவையான ஈரப்பதத்தை அளித்துஇ முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளை செயற்பாடுகளை ஊக்குவித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.

மருதாணி- கூந்தலின் மென்மை தன்மையை பாதுகாத்து  இயற்கையான முறையில் கூந்தலை கண்டிஷனர் செய்வதோடுஇ இளநரையையும் கட்டுப்படுத்துகிறது.

கறிவேப்பிலை -முடி வேர்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, இள நரையினை கட்டுப்படுத்தி கூந்தலின் இயற்கை கருமையை பாதுகாக்கிறது.

நெல்லி -கேசத்திற்கு போஷாக்களிப்பதோடு, வறண்ட தன்மையில் இருந்து பாதுகாத்து கூந்தல் உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

துளசி- இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு பொடுகு காரணிகளை அழித்து  முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது

வெந்தயம்- முடி வேர்களை பலப்படுத்தி முடி உதிர்வதை தடுத்து, பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

செம்பருத்தி- கூந்தலை மிருதுவாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பதுடன் கூந்தலின் அடர்த்தி தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

கரிசலாங்கன்ணி- உடைந்த கூந்தலை சரி செய்வதுடன், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

கன்னதை தேங்காய்- கூந்தலுக்கு தேவையான போஷாக்கினை  வழங்கிஇ முடி வேர்களை புதுபித்து கூந்தலை அழகாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருப்பதோடுஇமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி கேசத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

விட்டமின் E- கேசத்தின் வேர்களை ஆரோக்கியமாகவும் உயிரோட்டத்துடனும் வைத்திருப்பதோடு துரிதமான கூந்தல் வளர்ச்சிக்கு  உதவுகிறது. இது கூந்தலை இள நரையிலிருந்து பாதுகாக்கிறது.

ஆயர்வேதத்தால் நிரூபிக்கப்பட்ட ஒன்பது வகையான இயற்கை மூலிககைகளை  கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ReeBonn பிரீமியம் ஹெர்பல் எண்ணெய நாளொன்றிற்கு இருமுறை பாவிப்பதன் மூலம் முடி உதிர்வதை கட்டுப்படுத்தி துரித கேச வளர்சியை அடைய முடியும்.

இந்த புதிய எண்ணெய் வகை அறிமுகம் தொடர்பில் ReeBonn கொஸ்மெடிக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சிவராஜா கருத்து தெரிவிக்கையில், தமது ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் மூலமாக உள்நாட்டு சந்தையில் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் தயாரிப்பொன்றின் தேவை காணப்படுவது உணரப்பட்டிருந்தது. இந்தத் தேவையை அடிப்படையாகக் கொண்டு 'பல ஆண்டுகளாக நாம் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தோம், இதன் விளைவாக ReeBonn பிரீமியம்; ஹெர்பல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத் தயாரிப்பை பாவிப்பதன் மூலம், இளவயதில் கூந்தல் உதிர்வு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், இளநரையும் தவிர்க்கப்படுகிறது. பல ஆண்டுகள் பாரம்பரியமாக பரிந்துரைக்கப்படும் மூலிகைகள் மற்றும் சேர்மானங்களை இந்த தயாரிப்பில் உள்ளடக்கியுள்ளோம். பல கூந்தல் வளர்ச்சி எண்ணெய்த் தயாரிப்புகள் கொப்பரா தேங்காய்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் கன்னித்தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறோம். இதில் அநாவசிமான கொழுப்பு இல்லை. இதன் மூலமாக, நிரூபிக்கப்பட்ட ஒன்பது வகையான மூலிகைகள்; தலைச்சருமத்தின் நுண்துவாரங்களில் ஊடுருவி கேசத்திற்கு வலிமையூட்டுகிறது. சகல சேர்மானங்களும் ஆயுர்வேத முறைப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, ReeBonn பிரீமியம் ஹெர்பல் எண்ணெய் சிறந்த பெறுபேற்றை தரும் என்று எந்தவொரு நபருக்கும் நம்பிக்கை கொள்ள முடியும்' என குறிப்பிட்டார்.

2005ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது. இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில், shampoo, silicone conditioner, Rinse off conditioner, black henna, face wash, fairness cream,  Herbal creamy soap மற்றும் hand wash liquids போன்றன அடங்கியுள்ளன. ReeBonn கொஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள் ஜப்பான், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்படுத்தி செய்யப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X