2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹொரண பிரதேச நீர்க்குழாய் பணியாளர்களை கௌரவித்த S-lon

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்க்குழாய் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை ஹொரண (களுத்துறை பிராந்தியம்) பிரதேசத்தில் முன்னெடுக்க அண்மையில் S-lon லங்கா (பிரைவட்) லிமிட்டெட் முன்வந்திருந்தது. இந்த நிகழ்வின் நோக்கம், நீர்க்குழாய் பணியாளர்கள் மத்தியில் தகவல் திறன் வாய்ந்த அறிவுப் பகிர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து, அவர்களின் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவது மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த கடின உழைப்பில் ஈடுபடும் நீர்க்குழாய் பணியாளர்களின் ஆர்வத்துக்கு வெகுமதிகள் வழங்கி கௌரவிப்பதாகவும் அமைந்துள்ளது.

S-lon லங்கா (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் திரு. எஸ்.சி. வீரசேகர, விற்பனை பணிப்பாளர் திரு. ரன்ஜன் லியனகே, சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் களுத்துறை பிராந்தியத்தின் விநியோகஸ்தள உரிமையாளர் திரு. தம்மிக காரியவசம் மற்றும் NAITA அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

த கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் திரு. எஸ்.சி. வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், 'இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததன் நோக்கம், S-lon தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு உங்களை ஊக்குவிப்பதற்கு அல்ல. ஆரம்பம் முதல் S-lon ஐச் சேர்ந்த எமக்கு உதவிகளை வழங்கிய நீர்க்குழாய் பணியாளர்களாகிய உங்களை கௌரவிக்கவே இந்நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

S-lon தயாரிப்புகள் பற்றி அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'S-lon தவிர சந்தையில் மேலும் பல சிறந்த தயாரிப்புக்கள் காணப்படுகின்றன என நீங்கள் கருதினால், S-lon தயாரிப்புக்களை பாவிக்க ஊக்குவிக்க வேண்டாம். உங்கள் சிறந்த தெரிவு S-lon என நீங்கள் கருதினால் மட்டும் S-lon தயாரிப்புகளை பயன்படுத்த ஊக்குவிக்கவும். நீர்க்குழாய் பணியாளர்கள் தமது தொழிலில் நேர்மையாக திகழ வேண்டும். தமது நியமங்களை அவர்கள் பேண வேண்டும். உங்கள் வருமானத்தை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அதில் இரு பகுதியை உங்கள் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பகுதியை உங்கள் செலவீனத்துக்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். எஞ்சியிருக்கும் பகுதியை சேமித்துக் கொள்ளுங்கள்' என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

S-lon லங்கா (பிரைவட்) லிமிட்டெட், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) உடன் இணைந்து நீர்க்குழாய் பொருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் வியாபார பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தது. 

இந்த பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றி முழுக்கற்கை நெறியையும் பூர்த்தி செய்த நீர்க்குழாய் பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்புறுதியும், அவர்கள் பயிற்சி பெற்ற நீர்க்குழாய் பணியாளர்கள் என்பதை உறுதி செய்யும் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது. எதிர்பாராத சந்தர்ப்பங்களின் போது, நீர்க்குழாய் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வகையில் இந்த காப்புறுதி அமைந்துள்ளது. சமூகம் மற்றும் அதன் பங்காளர்கள் மீது கம்பனி காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. S-lon நீர்க்குழாய் பணியாளர்கள் கழகத்தில் அங்கத்துவத்தை கொண்டிருக்கும் நீர்க்குழாய் பணியாளர்கள் அனைவருக்கும், NAITA இனால் நிபுணத்துவ நீர்க்குழாய் பொருத்தல் சேவைகளை நாடு முழுவதும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X