2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹல்துமுல்ல பாடசாலைக்கு வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ள செலிங்கோ லைஃப்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் காப்புறுதி தலைவர்களான செலிங்கோ லைஃப் நிறுவனம் பதுளை மாவட்டம் ஹப்புத்தளை கல்விப் பிரிவின் கீழ் வரும் ஹல்துமுல்லை வித்தியாலயத்துக்கு நான்காம் வகுப்பு மாணவர்களின் தேவை கருதி வகுப்பறை கட்டிடம் ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.

இந்தக் கட்டடம் 600 சதுர அடிகள் கொண்டது. அண்மையில் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்தக் கட்டிடம் கிராமப் புற பாடசாலைகளின் தேவை கருதி செலிங்கோ லைஃப் நிர்மாணித்துள்ள 64 வது வகுப்பறை கட்டிடமாகும்.

ஹல்துமுல்லை வித்தியாலயம் பண்டாரவளை வலையக் கல்வி அலுவலகத்தின் நர்வாகத்தின் கீழ் வருகின்றது. ஆண்டு ஒன்று முதல் 11 வரை 269 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 27 ஆசிரியர்கள் இங்கு கடமை புரிகின்றனர். நான்கு தனிக்கட்டிடங்கள் மட்டுமே இங்கு இருந்தன. தற்போது செலிங்கோ நிர்மாணித்துள்ள கட்டிடம் ஐந்தாவது கட்டிடம் ஆகும்.

இலங்கை முழுவதும் உள்ள வசதி குறைந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில் கல்வி முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என்ற செலிங்கோ லைஃப்பின் நீண்ட கால அடிப்படையிலான சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்படுகின்றன. இவ்வாண்டில் திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரிக்கும் வகுப்பறைக் கட்டிடம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேலும் இரண்டு வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் 2015ல் தொடங்கவுள்ளன என்றும் கம்பனி அறிவித்துள்ளது.

2004ல் லுனுகம்வெஹரவில் உள்ள திஸ்ஸ ஆரம்ப பாடசாலையில் தொடங்கப்பட்ட செலிங்கோ லைஃப்பின்  இந்த வகுப்பறை நிர்மாண பணி இலங்கையின் நீள அகலங்களை தற்போது தொட்டுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு சித்தாண்டி, மொல்லிப்பத்தானை, ஆயித்தியமலை, எம்பிலிப்பிட்டிய, நிவித்திகலை, பெலிகல, அவிஸ்ஸாவலை, தெனியாய, கம்புறுபிட்டிய, பண்டாரவளை, அப்புத்தளை, நுவரஎலிய, றம்புக்கனை, கண்டி, பிலிமத்தலாவ, மதுல்கெல, றிகில்லகஸ்கட, றஜவெல்;ல, மாத்தளை, கல்கமுவ, பதவிய, பொரலுவௌ, அநுராதபுரம், மொனராகலை, ஆனமடுவ, மத்துகமை மற்றும் தொடம்கஸ்லந்தை ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

செலிங்கோ லைஃப்பின் சமூகக் கூட்டாண்மை பொறுப்பானது 'நாட்டு மக்களுக்குத் தேவையான அதி உயர் தரம் வாய்ந்த பாதுகாப்பையும் நிதி ரீதியான உறுதிப்பாட்டையும் வழங்கும் அதேவேளை மிகவும் பின்தங்கிய இடங்களில் கூட தேவை உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதார நலன் போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள தலையீட்டின் மூலம் நீடித்து நிலைக்கக் கூடிய வர்த்தக சுற்றாடலை உருவாக்குவதில் தொடர்ச்சியான அர்ப்பணத்தை கொண்டிருப்பதாகும்' என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகச் சிறந்த வர்த்தக முத்திரைகளுள் ஒன்றாக சுயாதீனமான முறையில் தரப்படுத்தப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2004ம் ஆண்டு முதல் நாட்டின் நீண்ட கால காப்புறுதி துறையில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. ஆயுள் காப்புறுதிக் கம்பனிகள் மத்தியில் ஆகக் கூடுதலான கிளைகள் கொண்ட வலையமைப்பையும் அது கொண்டுள்ளது. வர்த்தக சமநிலையைக் கட்டியெழுப்பல் மற்றும் சமூக அர்ப்பணங்கள் என்பனவற்றுக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு வகையான விருதுகளையும் அது வென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X