2025 ஜூலை 23, புதன்கிழமை

பொதுசன மாதாந்த உதவிப்பணமாக 26.76 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென இவ்வருடம் பொதுசன மாதாந்த உதவிப்பணமாக 26.76 மில்லியன் ரூபா நிதி வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகப்பிரிவிற்கு 10.8 மில்லியன் ரூபாவுயும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்கு 2.76 மில்லியன் ரூபாவும், கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவிற்கு 7.44 மில்லியன் ரூபாவும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்கு 5.76 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிதி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வறிய மக்களுக்கு மாதாந்தம் 250 ரூபா முதல் 500 ரூபா வரையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வழங்கப்படும்; பணிகள் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் இந்நிதியினை வடபிராந்திய தபால் திணைக்களத்திடம் மாதாந்தம் வழங்குமெனவும்  பொதுமக்கள் தமக்கு அண்மையிலுள்ள தபாலகங்கள் ஊடாக இந்நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயனாளிகளின் கொடுப்பணவுப் பட்டியல்கள் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள சமூக சேவைப் பிரிவினால் மாதாந்தம் தபாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .