2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துணுக்காயில் பெற்றோர்களை இழந்த 48 சிறுவர்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுத்தத்தால் பெற்றோர்களை இழந்து 48 சிறுவர்கள் வாழ்ந்து வருவதாக துணுக்காய்ப் பிரதேச செயலகப் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 சிறுமிகள் உட்பட 48 சிறுவர்கள் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் வாழ்ந்து வருவதாக அந்தப் புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை. தாய், தந்தையில் ஒருவரை இழந்தவர்களாக 323 சிறுவர்கள் பிரதேச செயலக பிரிவில் வசிப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதவித் திட்டங்களில், மேற்படி சிறுவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X