2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விதைநெல் பெற 2,000 ஏக்கரில் சிறுபோகம் செய்ய வேண்டும்

Menaka Mookandi   / 2014 மார்ச் 05 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான விதை நெல்லினைப் பெறுவதற்கு இவ்வருடம் குறைந்தது 2,000 ஏக்கரிலாவது சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட விதை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்தது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கூடுதலான இடங்களில் நெற்செய்கை அழிவடைந்துள்ளது. அத்துடன் குளங்களின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைவடைந்து செல்வதினால் இவ்வருடத்திற்குரிய சிறுபோக நெற்செய்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் அடுத்த ஆண்டு காலபோக நெற்செய்கையில் விதை நெல்லிற்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை காணப்படுகின்றது.

இந்நிலையினைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, இரணைமடுக் குளத்தில் இருக்கின்ற நீரின் அளவைக்கொண்டு குறைந்தது 2,000 ஏக்கரில் விதை நெல் உற்பத்தியினை மேற்கொள்ள வேண்டும் என உற்பத்தியாளர் சங்கம் மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .